பிறந்த நாளன்று கருப்பு சட்டையில் கமல் – உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்!

 

பிறந்த நாளன்று கருப்பு சட்டையில் கமல் – உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்!

திருவள்ளூர்

தமிழ் திரைப்பட நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமலஹாசனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பூந்தமல்லி அடுத்துள்ள செம்பரம்பாக்கத்தில்
ஈ.வி.பி பிலிம்சிட்டியில் நடைபெறும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வருகை தந்தார். அப்போது மக்கள் நீதி மய்ய கட்சித் தொண்டர்கள் குமணன்சாவடியில் , அவருக்கு வரவேற்பு அளித்து, பூந்தமல்லி வரை, தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலமாகச் சென்றனர்.

பிறந்த நாளன்று கருப்பு சட்டையில் கமல் – உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்!

ஏராளமான தொண்டர்கள் மோட்டார் சைக்கிளில் பேரணியாக ஈ. வி. பி பிலிம்சிட்டி வரை மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்தும் ஊர்வலமாக வரவேற்பு அளித்தனர். ஈ. வி. பி பிலிம் சிட்டி வந்தவுடன் காரின் மேல் பகுதியில் நின்று கட்சி தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.


அதனை தொடர்ந்து நடிகர் கமலுக்கு பூசணிக்காய் சுற்றியும் கும்ப மரியாதை வழங்கப்பட்டது. ரசிகர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு பின்னர் படப்பிடிப்புக்கு சென்றார்.

பிறந்த நாளன்று கருப்பு சட்டையில் கமல் – உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்!

நடிகர் கமலஹாசனை காண கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டதால், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பிறந்த நாளன்று கருப்பு சட்டையில் கமல் – உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்!


பிறந்தநாள் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் கருப்பு உடைகள் அணியக்கூடாது என வழக்கமாக உள்ள நிலையில், அதற்கு மாறாக தனது பிறந்த நாளன்று நடிகர் கமல் கருப்புச் சட்டையில் வந்தது கட்சியினர் மத்தியில் பேசும் பொருளாக இருந்தது.