ஊதிய உயர்வு கோரி திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்!

 

ஊதிய உயர்வு கோரி திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்!

திருப்பூர்

திருப்பூரில் 20 சதவீத கூலி உயர்வு கோரி பவர் டேபிள் பனியன் தைத்து தரும் ஒப்பந்த நிறுவனங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

திருப்பூரில் உள்ள பெரிய பனியன் நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் பின்னலாடைகள் தைத்து தரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், கூலி உயர்வு தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் காலாவதியானது. இதனால், கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி நேற்று முதல் பவர் டேபிள் உரிமையாளர்கள் கால்வரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான பனியன் துணிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

ஊதிய உயர்வு கோரி திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்!

இதுதொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பவர்டேபிள் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், கூலி உயர்வு தொடர்பாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கமான சைமாவிற்கு பலமுறை கடிதங்கள் அனுப்பியதாகவும், ஆனால் தொழிலாளர்கள் ஊதிய பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின்பே, கூலி உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தை தொடங்கும் என அவர்கள் கூறியுள்ளதாக தெரிவித்தனர்.

இதனால் வேறு வழியின்றி தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்த நிர்வாகிகள், வேலை நிறுத்தம் காரணமாக பவர்டேபிள் நிறுவனங்களில் பணிபுரியும் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பபட்டு உள்ளதாக தெரிவித்தனர். மேலும், சைமா சங்கத்தினர் விரைந்து கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.