அடகு வைத்த இடத்திலேயே அரிவாளை காட்டி கொள்ளையடித்த பலே திருடன்: திருப்பூரில் பரபரப்பு!

அடகு வைத்த இடத்திலேயே அரிவாளை காட்டி கொள்ளையடித்த பலே திருடன்: திருப்பூரில் பரபரப்பு!

கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இருப்பினும் பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் கடைகளை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள அட்டிகா கோல்டு பைனான்ஸ் நிதி நிறுவனம் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

அடகு வைத்த இடத்திலேயே அரிவாளை காட்டி கொள்ளையடித்த பலே திருடன்: திருப்பூரில் பரபரப்பு!

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு ஹெல்மெட் அணிந்து, அரிவாளுடன் புகுந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்த பெண் ஊழியரை மிரட்டி 10 சவரன் நகை, 20 ஆயிரம் பணத்துடன் தப்பித்துள்ளார். இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அடகு வைத்த இடத்திலேயே அரிவாளை காட்டி கொள்ளையடித்த பலே திருடன்: திருப்பூரில் பரபரப்பு!

அதில் கொள்ளையடித்தவர் சிறுபூலுவபட்டி, காவடிபாளையம் பகுதியை சேர்ந்த அழகுவேல் என்பது தெரியவந்தது. இவர் பல திருட்டு நகைகளை கொண்டு வந்து அட்டிகா கோல்டு பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ளார். இதனால் அந்த நிறுவனத்தை நோட்டமிட்டு அங்கு கொள்ளையடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அழகுவேலை போலீசார் கைது செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.