திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் – ஆட்சியர் அறிவிப்பு

 

திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் – ஆட்சியர் அறிவிப்பு

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் வினித் உத்தரவிட்டு உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 9ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளது. சமீப காலங்களில் அண்டை மாநிலம் மற்றும் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்களின் வாழ்வாதார பாதிப்புகளை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட தளர்வுகள் தவறாக பயன்படுத்தப்படாமல் கண்காணித்து அரசின் அழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

எனவே, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்தி கொரோனா மூன்றாம் அலை தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தும் விதமாக விதமாக திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் கீழ்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம் தவிர அனைத்து மளிகை கடைகள், காய்கறி கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் – ஆட்சியர் அறிவிப்பு

திருப்பூர் மாநகரில் அமைந்துள்ள 33 வணிக பகுதிகள் மற்றும் பல்லடம், தாராபுரம், உடுமலைபேட்டை ஆகிய நகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள 13 வணிக பகுதிகள் ஆகிய பகுதிகளில் இயங்கும், பால்,மருந்தகம், மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகள் மற்றும் உணவு பொருட்கள், இறைச்சி, கோழி, மீன் விற்பனை தவிர பிற கடைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் பன்னடுக்கு வணிக வளாகங்கள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது. மேலும், வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களுக்கும் மேலே தெரிவிக்கப்பட்ட நடைமுறைகள் பொருந்தும். பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் – ஆட்சியர் அறிவிப்பு

மாவட்டத்தில் உள்ள உணவகங்கள் அனைத்திலும், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுகிறது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் இயங்கும் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் சேராதவாறு ஒழுங்குபடுத்தி கண்காணிக்கும் பணியைஉள்ளாட்சி அமைப்பகள் போலீசார் உதவியுடன் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.

கேரளா – தமிழ்நாடு எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி சோதனைச்சாவடிகள் வழியாக திருப்பூர் மாவட்டத்திற்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி. பிசிஆர் சோதனை சான்றிதழில் கொரோனா இல்லை என்ற சான்று அல்லது 2 தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்று கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் சோதனைச்சாவடிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்

பொதுமக்கள் அனைவரும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றி நோய் தொற்று பரவாமல் தடுப்பதில் மாவட்ட நிர்வாகத்திற்குமுழு ஒத்துழைப்பு வழங்குமாறு திருப்புர் ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.