ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் மரணம்? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

 

ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் மரணம்? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடையால் நோயாளிகள் உயிரிழந்ததாக எழுந்த புகார் குறித்து ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அம்மருத்துவமனையில் 40 நிமிடம் மின்தடை ஏற்பட்டதால், ஆக்சிஜன் விநியோகம் கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இது குறித்து பேசிய திருப்பூர் அரசு மருத்துவமனை டீன் வள்ளி, மின்தடை ஏற்பட்டது உண்மை தான் என்றும் ஆக்சிஜன் குறைபாட்டால் அவர்கள் உயிரிழக்கவில்லை, வேறு ஏதேனும் உடலில் பிரச்னை இருக்கலாம் என்றும் தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் மரணம்? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

இந்த நிலையில், கட்டுமானப்பணியின் போது மின்வயர் துண்டிக்கப்பட்டதால் 40 நிமிடம் மின்விநியோகம் பாதிக்கப்பட்டதாக அம்மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். மின் வயர் துண்டிக்கப்பட்டிருந்த நேரத்தில் 2 நோயாளிகள் உயிரிழந்ததாக புகார் வந்திருப்பதாகவும் இது தொடர்பாக ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், நோயாளிகளை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து சுகாதாரத்துறையிடம் கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.