திருப்பூர்: உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டம்

 

திருப்பூர்: உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்  போராட்டம்

உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துகின்றனர்.
இன்று (28-10-2020) காலை 10 மணிக்கு ஊத்துக்குளி, விஜயமங்கலம் ரோடு, ரெட்டியபாளையம் ராதா அரிசி ஆலை பிரிவில் துவங்கி நடைபெற்று கொண்டு உள்ளது.

திருப்பூர்: உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்  போராட்டம்

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு, தற்சார்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கி.வெ.பொன்னையன், திமுக ஊத்துக்குளி ஒன்றிய கழக செயலாளர் பி.பி. ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்கள். தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் தோழர்.ஆர்.குமார் துவக்க உரையாற்றினார்.

திருப்பூர்: உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்  போராட்டம்

இன்றைய போராட்டத்திற்கு கள ஒருங்கிணைப்பாளர் கே.கெளரீஸ்வரன் தலைமை தாங்கினார். என். விஜயராகவன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஐ) திருப்பூர் மாவட்ட செயலாளர் எஸ்.சின்னசாமி, ஊத்துக்குளி ஒன்றிய செயலாளர் தோழர் ஜி.கே.கேசவன், கொ.ம.தே‌.க. ஊத்துக்குளி ஒன்றிய தலைவர் சீனிவாசமூர்த்தி, திமுக ஊராட்சி கழக செயலாளர் வெங்கடாசலம், காவுத்தம்பாளையம் எஸ்.குமார், பல்லவராயன் பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் மதிமுக சார்பில் அப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்து வருகிறார்கள்.

திருப்பூர்: உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்  போராட்டம்

போராட்டத்தில் முன் வைத்த கோரிக்கைகள்:

1) தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோவாட் திட்டத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்திய தந்தி சட்டத்தையும், திட்டத்தையும் எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர், அந்த வழக்கு வருகிற நவம்பர் 21ம் தேதி சென்னை நீதிமன்றத்தில் இறுதி விசாரணை எடுக்கப்படவுள்ளது, இந்நிலையில் திட்டப் பணிகளைத் தொடர்வதற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்நுழைவு அனுமதி வழங்கக்கூடாது.

2) சுஸ்லான் தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தின் உயர்மின் கோபுரம் திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகளின் அனுமதி பெறப்படவில்லை, இருப்பினும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சட்டத்திற்குப் புறம்பாக முன் நுழைவு அனுமதி வழங்கியுள்ளார். எனவே அந்த முன் நுழைவு அனுமதிகள் ரத்து செய்யப்பட வேண்டும்.