“ஏழுமலையான ஏழையாக்கிட்டிங்களே”-பக்தர்கள் வராததால் ஏற்பட்ட நிலை.

 

“ஏழுமலையான ஏழையாக்கிட்டிங்களே”-பக்தர்கள் வராததால் ஏற்பட்ட நிலை.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பகதர்கள் வருகை குறைந்ததால் ,அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு சம்பளம் தர முடியவில்லையாம் .

“ஏழுமலையான ஏழையாக்கிட்டிங்களே”-பக்தர்கள் வராததால் ஏற்பட்ட நிலை.

கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஏற்பட்ட ஊரடங்கால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்த்தர்களின் எண்ணிகை வெகுவாக குறைந்துள்ளது .இதனால் உண்டியல் வருவாய் கடும் சரிவை சந்தித்துள்ளது .எப்போதும் கோடிக்கணக்கில் கொட்டும் உண்டியல் வருவாய் லட்சங்களை கூட தாண்டவில்லையாம் .இதனால் அங்கு வேலை பார்க்கும் 23000 பணியாளர்களுக்கு சம்பளம் தர முடியாமல் நிர்வாகம் திணறுகிறதாம் .அதனால் ஊழியர்களின் சம்பளத்தை ,அந்த கோவிலுக்கு வங்கியிலிருக்கும் டெபாசிட் தொகையை எடுத்து தரலாமா அல்லது வட்டியை கொண்டு சமாளிக்கலாமா என நிர்வாகம் ஆலோசிக்கிறது .
ஆனால் இப்போது அரையாண்டுக்கு ஒரு முறை பெறப்படும் வங்கி டெபாசிட் வட்டி தொகையை மாதமொருமுறை பெறுமாறு மாற்றி ஊழியர்களுக்கு சம்பளம் தர முடிவெடுக்கப்பட்டுள்ளது .கோவிலுக்கு பல வங்கிகளில் கிட்டத்தட்ட 12000 கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட் உள்ளது .அதுமட்டுமல்லாமல் கோவிலின் தங்க நகைகளின் மதிப்பு பல்லாயிரம் கோடிகளை தாண்டும் .ஆனால் இப்போதைக்கு அவைகளை எடுக்காமல் டெபாசிட் வட்டியை கொண்டு சமாளிக்க கோவில் அறங்காவலர் குழு முடிவெடுத்துள்ளது .

“ஏழுமலையான ஏழையாக்கிட்டிங்களே”-பக்தர்கள் வராததால் ஏற்பட்ட நிலை.