80 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் : பக்தர்கள் உற்சாகம்!

80 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட  திருப்பதி ஏழுமலையான் கோயில் : பக்தர்கள் உற்சாகம்!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொழுதுபோக்கு இடங்கள், கோயில்கள் மூடப்பட்டுள்ளன.

80 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட  திருப்பதி ஏழுமலையான் கோயில் : பக்தர்கள் உற்சாகம்!

இந்நிலையில் 80 நாட்களுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு, இன்று முதல் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் கோயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அழகாக காட்சி தருகின்றன.

80 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட  திருப்பதி ஏழுமலையான் கோயில் : பக்தர்கள் உற்சாகம்!

திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கும், 10 ம் தேதி உள்ளூர் பக்தர்களுக்கும் நாளொன்றுக்கு 6000 பேர் என்ற அடிப்படையில் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 11 ஆம் தேதி முதல் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

80 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட  திருப்பதி ஏழுமலையான் கோயில் : பக்தர்கள் உற்சாகம்!
மேலும் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க 6 அடி தூரத்தில் தரையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். மேலும் குடிநீர் குழாய்கள் கால் விரலில் அழுத்தினால் இயங்குமாறு அமைக்கபட்டுள்ளது. மேலும் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் கோயிலுக்கு வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் டிக்கெட்டுகள் என்ற கணக்கில் இன்று முதல் ஆன்லைனில் தேவஸ்தான நிர்வாகம் 300 ரூபாய் டிக்கெட்டுகளை வெளியிடுகிறது. அதேபோல் இலவச தரிசனத்திற்கான 3 ஆயிரம் டிக்கெட்டுகளை 11-ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.