நாளை முதல் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி!இலவச டிக்கெட் வாங்க குவிந்த பக்தர்கள்

 

நாளை முதல் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி!இலவச டிக்கெட் வாங்க குவிந்த பக்தர்கள்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொழுதுபோக்கு இடங்கள், கோயில்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் 80 நாட்களுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு, நாளை முதல் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது.

நாளை முதல் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி!இலவச டிக்கெட் வாங்க குவிந்த பக்தர்கள்

இதையடுத்து இலவச தரிசனம் டிக்கெட் வாங்குவதற்காக திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதற்காக ஆன்லைனில் நாளொன்றுக்கு மூன்று ஆயிரம் 300 ரூபாய் டிக்கெட்டுகளை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும் திருப்பதி உள்ள ஸ்ரீநிவாசம், அலிபிரி, விஷ்ணு நிவாசம் ஆகிய கெஸ்ட் ஹவுஸ்களில் அமைக்கப்பட்டிருக்கும் கவுண்டர்களில் 3 ஆயிரம் இலவசங்களை வழங்கவும் முடிவு செய்து இன்று முதல் வழங்கி வருகிறது. டோக்கன்களை வாங்க வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், மாஸ்க் அணிந்து வராமலும் இருப்பது கொரோனா பரவலை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

கூட்டம் அதிகமானால் இலவச தரிசன டோக்கன்களை கவுண்டர்களில் வழங்கும் நடைமுறையை ரத்து செய்து அவற்றையும் ஆன்லைனில் வெளியிடுவோம் என்று தேவஸ்தான ஏற்கனவே அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.