திருப்பதி ஜீயர், 18 அர்ச்சகர்களுக்கு கொரோனா… பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்க கோரிக்கை!

திருப்பதி ஜீயர், 18 அர்ச்சகர்களுக்கு கொரோனா… பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்க கோரிக்கை!

திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், அர்ச்சகர்களுக்கு கொரோனாத் தொற்று தொடர்ந்து உறுதியாகி வரும் நிலையில் பொது மக்கள் தரிசனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோவில் ஊழியர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
ஊரடங்கு அமலிலிருந்த காலத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பெரிய அளவில் கொரோனாத் தொற்று இல்லை. கடந்த மாதம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டதிலிருந்து ஊழியர்கள் பலருக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது.

திருப்பதி ஜீயர், 18 அர்ச்சகர்களுக்கு கொரோனா… பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்க கோரிக்கை!ஊழியர்கள், 18 அர்ச்சகர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்ட நிலையில் தற்போது பெரிய ஜீயருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. ஶ்ரீ சடகோப ராமானுஜ பெரிய ஜீயங்கார் தற்போது ஶ்ரீவெங்கடேஷ்வரா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பதி ஜீயர், 18 அர்ச்சகர்களுக்கு கொரோனா… பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்க கோரிக்கை!
பெரிய ஜீயருக்கே கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது பக்தர்கள், திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்கள், அர்ச்சகர்கள் மத்தியில் கொரோனா பரவல் அதிகரித்தால் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பது பற்றி மறுபரிசீலனை செய்யப்படும் என்று அறங்காவல் கமிட்டி தரப்பில் கூறப்பட்டு இருந்தது. தற்போது ஜீயருக்கே தொற்று ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் தரிசனத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பதி ஜீயர், 18 அர்ச்சகர்களுக்கு கொரோனா… பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்க கோரிக்கை!