‘வைகுண்ட ஏகாதசி’ : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு எத்தனை கோடி வருவாய் தெரியுமா?

‘வைகுண்ட ஏகாதசி’ : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு எத்தனை கோடி வருவாய் தெரியுமா?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் ரூ.4.49 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

‘வைகுண்ட ஏகாதசி’ : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு எத்தனை கோடி வருவாய் தெரியுமா?

ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த முறையும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி விழா நடத்தப்பட்டது. கொரோனா காரணமாக தற்போது உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக தெரிகிறது. நேற்று நள்ளிரவு திருப்பதியில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதனைக் காண, கிட்டத்தட்ட 43 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு திரண்டதாகவும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முடி காணிக்கை செலுத்தியதாகவும் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வைகுண்ட ஏகாதசி’ : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு எத்தனை கோடி வருவாய் தெரியுமா?

இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் கோவிலுக்கு ரூ.4.49 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பணக்கார கடவுள்’ என்று அழைக்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கிடைத்திருக்கும் இந்த வருவாய் பெரிதில்லை என்றாலும், உள்ளூர் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையிலும் கோடிக் கணக்கில் வருவாய் கிடைத்திருப்பது கவனிக்கத்தக்கது. மேலும், 2 நாட்களுக்கு முன்னர் ரூ.3.38 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக தேவஸ்தானம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.