“தமிழகத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில்” : முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்!

“தமிழகத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில்” : முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்!

உளுந்தூர்பேட்டையில் அமைய உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு இந்த மாதம் அடிக்கல் நாட்டும் விழா நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழகத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில்” : முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்!

கடந்த 2019 ஆம் ஆண்டு உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுரு , உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலயில் ஏழுமலையான் கோயில் கட்ட 4 ஏக்கர் நிலத்தினை வழங்கினார். இதற்கான ஆவணத்தை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேவஸ்தான அதிகாரிகளிடம் முதல்வர் பழனிசாமி ஒப்படைத்தார். அத்துடன் கள்ளக்குறிச்சியில் ஏழுமலையான் கோயில் கட்ட தேவையான நிர்வாக அனுமதியை வழங்குமாறு தமிழக முதல்வர் பழனிசாமி ஆந்திர முதல்வருக்கு கடிதம் எழுதினார்.

“தமிழகத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில்” : முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்!

அதில், கோயிலை நிர்மாணிப்பதற்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் தமிழக அரசு ஏற்கும் என்றும் எனவே கோயிலை கட்ட உடனடியாக அனுமதி அளிக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

“தமிழகத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில்” : முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்!

இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுரு பெயரில் இருந்த 4 ஏக்கர் நிலம் இன்று திருப்பதி தேவஸ்தான பெயரில் பதிவு செய்து தரப்பட்டுள்ளது. இக்கோயிலை கட்ட தனியார் மற்றும் பொதுமக்களிடமிருந்து ரூ.10 கோடி நிதி திரட்ட முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக ரூ. 3.16 கோடி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இக்கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா இந்த மாதம், நடைபெற இருப்பதாகவும், அதில் முதல்வர் பழனிசாமி மற்றும் திருப்பதி தேவஸ்தான சேர்மன் சுப்பா ரெட்டி இருவரும் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.