கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருப்பதி பாத யாத்திரைக்கு மீண்டும் அனுமதி

 

கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருப்பதி பாத யாத்திரைக்கு மீண்டும் அனுமதி

கொரோனா அச்சுறுத்தலால் கோயில் போன்ற பொது இடங்களில் பக்தர்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்குமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. பக்தர்கள் அதிகம் கூடும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் உள்ள பக்தர்கள் வர வேண்டாம் என்று தேவஸ்தான நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. மேலும் வெளிநாடுவாழ் இந்தியர்கள், வெளிநாட்டினர்களுக்கு திருப்பதி கோவிலுக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.மேலும் கொரோனா பரவலால், திருப்பதி மலைப்பாதை, நடைபாதை ஆகியவை கடந்த மார்ச் மாதம் தற்காலிகமாக மூடப்பட்டன.

கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருப்பதி பாத யாத்திரைக்கு மீண்டும் அனுமதி

இந்நிலையில் திருப்பதியில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் பாத யாத்திரையாக நடந்துவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அலிபிரி பாதையில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்து சென்று தரிசிக்கலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஸ்ரீவாரிமெட்டு பாதையில் நடைபயணமாக வர தடை நீடிப்பதாகவும், புரட்டாசி மாதத்தில் தமிழகத்திலிருந்து யாரும் நடைபயணமாக வரவேண்டாம் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.