திருப்பதியில் ஏழுமலையான்: தினமும் ஆன்லைனில் 3 ஆயிரம் தரிசன டிக்கெட்கள் விற்பனை

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் 3,000 பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளது.

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் 3,000 பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் 11-ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கமாக திருப்பதிக்கு வரும் கூட்டத்தில் கிட்டத்தட்ட 10-இல் ஒரு பகுதியினர் மட்டும், அதாவது சுமார் 6,000 முதல் 7,000 பக்தர்களுக்கு மட்டுமே ஒரு நாளைக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஒரு மணி நேரத்திற்கு சுமார் 500 பக்தர்கள் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

பக்தர்கள் தரிசனம் காலை 6:30 மணிக்கு தொடங்கி தினமும் இரவு 7:30 மணிக்கு முடிவடையும். 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும், 10 வயதுக்குக் குறைவான குழந்தைகளும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனுமதிக்கப்படுவதில்லை. கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களைச் சேர்ந்தவர்களும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

tirupati

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் 3,000 தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் முன்பதிவுக்காக வெளியிடப்படும். மேலும், 3000 ஆஃப்லைன் டிக்கெட்டுகள் மலையின் நுழைவாயிலான அலிபிரி சோதனைச் சாவடியில் உள்ள கவுண்டர்களில் வழங்கப்படும். ஜூன் மாதத்திற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் ஜூன் 8-ஆம் தேதி வெளியிடப்படும்.

Tirupati

திருப்பதி கோவிலுக்கு வரும் ஒவ்வொரு பக்தரும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வெப்பத் திரையிடலுக்கு உட்படுத்தப்படுவார்கள். பக்தர்கள் முகக் கவசம் அணிந்து, இரண்டு நபர்களுக்கு இடையில் ஆறு அடி தூரம் இடைவெளி விட்டு இருப்பது கட்டாயமாகும். விஐபிகளுக்கு தினமும் காலை 6:30 மணி முதல் ஒரு மணி நேரம் தரிசனம் வழங்கப்படும். மலைகளில் பக்தர்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் வாகனங்கள் அலிபிரி சோதனைச் சாவடியில் சுத்திகரிக்கப்படும். மேலும் மலை சன்னதிக்கான நடைப்பாதை சிறிது நேரம் மூடப்பட்டிருக்கும்.

திருப்பதியில் தங்குமிட முன்பதிவும் ஆன்லைனில் உள்ளது. ஒரு அறையில் இரண்டு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். விடுதி முன்பதிவு ஒரு நாளுக்கு மட்டுமே பக்தர்கள் தங்க அனுமதிக்கப்படுகிறது.

- Advertisment -

Most Popular

எஸ்.ஐ. வில்சன் கொலை: என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.ஐ வில்சன் கடந்த ஜனவரி மாதம் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அப்துல் சமீம் மற்றும் தஃவ்பீக் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குற்றவாளிகள்...

கோயம்பேடு காய்கனி சந்தை விவகாரத்தில் பொறுப்புகளை தட்டிக் கழிக்காதீர்கள்- மக்கள் நீதி மய்யம்

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 3,680 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர்...

பெண்களைப் பாடாய்ப்படுத்தும் பொடுகுத்தொல்லைக்கு தீர்வு!

பொடுகு... தலையில் அழுக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொடுகு சேர்ந்தால் பெரிய தொல்லைகளுக்கு வழிவகுக்கும். தலையில் அரிப்பு,கொப்புளம் என பிரச்சினைகள் தொடரும். அதுமட்டுமல்ல இந்த பாதிப்பு நீடித்தால் தலைமுடி அதிகமாக உதிரத் தொடங்கும்....

திருச்சி சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் உறவினர் செந்தில் கைது!

திருச்சி 9ஆம் வகுப்பு மாணவி கொலை தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய மேலும் கூடுதலாக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சோமரசம்பேட்டை அருகே உள்ள அரியாவூர் அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகள் நேற்று மதியம்...
Open

ttn

Close