திருப்பதி கோயில் திறக்கப்பட்டதிலிருந்து சுமார் 743 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

திருப்பதி கோயில் திறக்கப்பட்டதிலிருந்து சுமார்  743 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

திருப்பதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் பொது முடக்க தளர்வுகளின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு கோவில் ஊழியர்கள் முதல் அர்ச்சகர்கள் வரை பலருக்கும் நோய் தொற்று ஏற்பட்டது. இதுவரை இரண்டு அர்ச்சகர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

திருப்பதி கோயில் திறக்கப்பட்டதிலிருந்து சுமார்  743 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

இந்நிலையில் இது குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தான செயல் அதிகாரி அனில் குமார் சிங் கூறும்போது, “திருப்பதி ஏழுமலையான் கோவில் பொது முடக்கத்திற்கு பின்பு திறக்கப்பட்டலிருந்து சுமார் 743 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் பாதிக்கப்பட்டவர்களில் 402 பேர் குணமடைந்து உள்ளதாகவும் 338 பேர் மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

திருப்பதி கோயில் திறக்கப்பட்டதிலிருந்து சுமார்  743 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

இருப்பினும் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கொரோனா ஏற்படவில்லை என்றும் தேவஸ்தான ஊழியர்கள் உண்மையாக வேலை பார்த்தார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.