குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் – சமரசம் செய்த அமைச்சர்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் – சமரசம் செய்த அமைச்சர்

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே 6 மாதங்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து, கிராம மக்கள்ள சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சி பாங்கி நகர் பகுதியில் கடந்த 6 மாதமாக குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் – சமரசம் செய்த அமைச்சர்

வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, ஆம்பூர் – பேர்ணாம்பட்டு சாலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள அவ்வழியாக சென்ற வணிகவரித்துறை அமைச்சர்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் – சமரசம் செய்த அமைச்சர்

கே.சி.வீரமணி, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, கொரோனா காலத்தில் குடிநீர் இன்றி தாங்கள் அவதிப்பட்டு வருவதாகவும், பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து, போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்ததின் பேரில், போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.