திருப்பத்தூர்- விவசாய நிலத்தில் தரையிறக்கப்பட்ட தனியார் ஹெலிகாப்டர்

 

திருப்பத்தூர்- விவசாய நிலத்தில் தரையிறக்கப்பட்ட தனியார் ஹெலிகாப்டர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் பகுதியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக தனியார் ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையை சேர்ந்த நகைக்கடை அதிபர் சீனிவாசன் என்பவர், தனது குடும்பத்தினருடன் ஆந்திர மாநிலம் திருப்பதி கோயிலுக்கு தனியார் ஹெலிகாப்டர் மூலம் சென்றுள்ளார். ஹெலிகாப்டரில் 2 பைலட்கள் உட்பட 7 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை திருப்பத்தூர்

திருப்பத்தூர்- விவசாய நிலத்தில் தரையிறக்கப்பட்ட தனியார் ஹெலிகாப்டர்

பகுதியை கடந்து சென்றபோது அங்கு கடுமையான பனிமூட்டம் நிலவியுள்ளது. இதனால் பாதை தெரியாததால் விமானி திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி பிரதான சாலை அருகே கந்திலி அடுத்த தாதன்குட்டை பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கியுள்ளார். இதில், பைலட் மற்றும் பயணிகள் பத்திரமாக தரையிறங்கினர். இந்நிலையில், தங்கள்

திருப்பத்தூர்- விவசாய நிலத்தில் தரையிறக்கப்பட்ட தனியார் ஹெலிகாப்டர்

பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டரை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேல் விசாரணை மேற்கொண்டார். அப்போது, வானிலை சீரடைந்ததும் கிளம்பி சென்றுவிடுவதாக சீனிவாசன் தெரிவித்தார். இதனையடுத்து சிறிதுநேரத்திற்கு பின்னர், ஹெலிகாப்டரில் அவர்கள் புறப்பட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.