“உதவிக்கு ஆள் இல்லை” – சாலையில் சரிந்து விழுந்து பலியான நபர்

 

“உதவிக்கு ஆள் இல்லை” – சாலையில் சரிந்து விழுந்து பலியான நபர்

திருப்பத்தூர்

ஆம்பூரில் விபத்தில் படுகாயமடைந்த நபரை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல யாரும் முன்வராததால் அவர் சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுண்ணாம்பு கால்வாய் பகுதியை சேர்ந்தவர் அஜீஸ். துத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் ஆலையின் கேன்டீனில் பணிபுரிந்து வரும் இவர், நேற்றிரவு தலையில் படுகாயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக உடனடியாக வேலூர்

“உதவிக்கு ஆள் இல்லை” – சாலையில் சரிந்து விழுந்து பலியான நபர்

மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அஜீசின் உதவிக்கு யாரும் இல்லாததால் அவரை ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால், அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறி சாலையோரம் அமர்ந்துள்ளார். அப்போது, அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துசென்றனர். அப்போது மருத்துவர்கள் கேட்டுகொண்டும் அவர்களில் யாரும் அஜீஸ் உடன் செல்ல மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அஜீஸ்

“உதவிக்கு ஆள் இல்லை” – சாலையில் சரிந்து விழுந்து பலியான நபர்

மீண்டும் சாலையோரம் அமர்ந்திருந்த நிலையில், உடலில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் சடலத்தை கைப்பற்றி ஆம்பூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, அஜீஸ் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிந்த காட்சி, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.