திருப்பதி ஏழுமலையான் கோயில் நிலத்தை விற்க கூடாது – அறங்காவலர் குழு கூட்டம் முடிவு

 

திருப்பதி ஏழுமலையான் கோயில் நிலத்தை விற்க கூடாது – அறங்காவலர் குழு கூட்டம் முடிவு

கொரோனா வைரஸால் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து ஆலோசனை கூட்டங்களும் காணொளி வாயிலாக நடைபெற்று வருகிறது. அதே போல இன்று, தேவஸ்தான வரலாற்றில் முதல் முறையாக வீடியோ கால் மூலம் அறங்காவலர் குழு கூட்டம் சுப்பாரெட்டி தலைமையில் நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் நிலத்தை விற்க கூடாது – அறங்காவலர் குழு கூட்டம் முடிவு

அந்த கூட்டத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் நிலங்களை விற்பனை செய்வது குறித்தும், கோவிலுக்கு பக்தர்களை அனுமதிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது,
தமிழக தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி திருப்பதி கோவிலின் சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது,

கூட்டத்தின் முடிவில் கோயில் நிலங்களை விற்பனை செய்யக் கூடாது என்றும் மத்திய, மாநில அரசுகள் அனுமதித்த பிறகு தான் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடங்களை விற்பனை செய்ய இந்து மத தலைவர்களும் பக்தர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.