திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!

50 போலீசார் உள்பட  190 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

129

கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, திருமலை திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் வழக்கமான பூஜைகள் நடந்து வந்தன. கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு திருப்பதியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திருப்பதி கோயில் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 50 போலீசார் உள்பட  190 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் திருப்பதியில் கொரோனா தொற்று வேகம் எடுத்து வரும் நிலையில் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

Govindaraja Swamy temple

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஏற்கனவே திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான ஊழியர் வீராசாமி, முன்னாள் பிரதான அர்ச்சகரான சீனிவாசமூர்த்தி என்ற 75 வயதான அர்ச்சகர் கொரோனா பாதிப்பால் பலியானது கவனிக்கத்தக்கது.