கொரோனா பரவல் எதிரொலி : நெல்லையப்பர் கோயில் ஆனி பிரம்மோற்சவ விழா ரத்து!

 

கொரோனா பரவல் எதிரொலி : நெல்லையப்பர் கோயில் ஆனி பிரம்மோற்சவ விழா ரத்து!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே மக்கள் ஊரடங்கை மீறி வெளியில் செல்லாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் மக்கள் ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் தான் வழிபாட்டு தலங்கள் கூட மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவிலில் இந்த ஆண்டு நடைபெற இருந்த ஆனி பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் எதிரொலி : நெல்லையப்பர் கோயில் ஆனி பிரம்மோற்சவ விழா ரத்து!

இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி வட்டம் மற்றும் நகர் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்தியம்மன் திருக்கோவிலில் வரும் 25/ 6 /2020 முதல் 4/7 /2020 வரை நடைபெற உள்ள ஆனி பிரம்மோற்சவ திருவிழா கொரோனா தொற்று நோயின் காரணத்தால் இத்திருக்கோயில் அர்ச்சகர்கள் அளித்துள்ள கருத்துப்படி நடப்பாண்டு நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், நன்கொடையாளர்கள், சிவனடியார்கள், பக்தர்கள் மற்றும் நகர வாசிகள் திருக்கோவில் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.