முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த திருமா!

 

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த திருமா!

அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் அறிவிப்புக்காக முதல்வரை நேரில் சந்தித்து திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் நேற்றைய கூட்டத்தொடரில் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், வடசென்னையில் அயோத்திதாசரின் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார். தமிழன், திராவிடம் என்னும் இரண்டு சொற்களை அரசியல் களத்தில் அடையாளச் சொற்களாகக் மாற்றி அறிவாயுதம் ஏந்தியவர் அயோத்திதாச பண்டிதர். அவர் கொடுத்த பாதையில் தான் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பெரியாரே தனது பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்திருத்த கருத்துகளுக்கும் முன்னோடி அயோத்திதாச பண்டிதர் என்று குறிப்பிட்டுள்ளார். 1845 முதல் 1914 வரை வாழ்ந்த அயோத்திதாசரின் 175ம் ஆண்டு நினைவாக வட சென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுவது அரசு பெருமைப் படுகிறது என்று தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த திருமா!

முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு அரசியல் தலைவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதற்கு வரவேற்பு தெரிவித்து பாமக தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், வடசென்னையில் பண்டிதர் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.