திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி!

திருப்பதியில் சுமார் 7,000 பேருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ள நிலையில் அங்கு மக்கள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு திருப்பதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி!

காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டுமே கடைகள் திறந்து இருக்கும் நிலையில் 11 மணிக்கு மேல் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியில் வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி!

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் தற்காலிக பிரதான அர்ச்சகரும், கோவிந்தராஜசாமி கோயிலில் நிரந்தர அர்ச்சகராகவும் இருந்த சீனிவாசார்யாலு (45) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக திருப்பதி கோயிலின் பிரதான அர்ச்சகர் சீனிவாச மூர்த்தி கொரோனாவுக்கு பலியானது கவனிக்கத்தக்கது.