திருப்பதி லட்டு பிரசாதம் வீட்டுக்கே டெலிவரி .. போலி வெப்சைட் மீது தேவஸ்தானம் போலீசில் புகா

 

திருப்பதி லட்டு பிரசாதம் வீட்டுக்கே டெலிவரி .. போலி வெப்சைட் மீது தேவஸ்தானம் போலீசில் புகா

திருப்பதி லட்டு பிரசாதம் வீட்டுக்கே டெலிவரி செய்வோம் என்று வாக்குறுதி அளித்த போலி வெப்சைட் மீது திருமலா திருப்பதி தேவஸ்தானம் புகார் கொடுத்துள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நம் நாட்டின் பணக்கார கோயிலும், சர்வதேச அளவில் பக்தர்கள் அதிகம் வருகை தரும் கோயிலான திருப்பதி திருமலை கோயிலை திருமலா திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் செய்து வருகிறது. திருமலையில் வெங்கடேஸ்வரர் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரபலம். பக்தர்கள் அதனை தெய்வீக பிரசாதமாக கருதுவதே இதற்கு காரணம்.

திருப்பதி லட்டு பிரசாதம் வீட்டுக்கே டெலிவரி .. போலி வெப்சைட் மீது தேவஸ்தானம் போலீசில் புகா
திருப்பதி திருமலை கோயில்

அண்மையில் திருமலை கோயில் லட்டு பிரசாதத்தை உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் வீட்டுக்கு டெலிவரி செய்வதாக திருமலை கோயில் பெயரில் போலி வெப்சைட் ஒன்று வாக்குறுதி அளித்துள்ளது. இந்த தகவலை அறிந்த திருமலா திருப்பதி தேவஸ்தானம் அந்த போலி வெப்சைட்டுக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்தது. திருப்பதியில் உள்ள கிழக்கு காவல் நிலையத்தில் பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக திருமலா திருப்பதி தேவஸ்தானம் புகார் கொடுத்துள்ளது.

திருப்பதி லட்டு பிரசாதம் வீட்டுக்கே டெலிவரி .. போலி வெப்சைட் மீது தேவஸ்தானம் போலீசில் புகா
திருப்பதி லட்டு பிரசாதம்

இதனையடுத்து போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். இதற்கிடையே, திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் ஐ.டி. பிரிவு அந்த வெப்சைட்டை அகற்றியது. கடந்த சில தினங்களுக்கு முன் திருமலா திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளையின் தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி, இந்திய பசுக்களை காக்கும் முயற்சியின் ஒரு பகுதியான குடிகோ-கோமாட்டா திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இந்திய பசு இனங்கள் மற்றும் கன்று குட்டிகளை அறக்கட்டளைக்கு மக்கள் தானமாக வழங்குமாறு ரெட்டி வலியுறுத்தினார்.