திருப்பதி லட்டு பிரசாதம் ஆன்லைனில் விற்பனை…. திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு..

 

திருப்பதி லட்டு பிரசாதம் ஆன்லைனில் விற்பனை…. திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு..

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு தழுவிய லாக்டவுன் நடைமுறையில் உள்ளதால் கோயில் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களின் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் பல கோயில்களின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின் பணக்கார கோயிலாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயில் வருவாய் மிகவும் பாதித்துள்ளது.

திருப்பதி லட்டு பிரசாதம் ஆன்லைனில் விற்பனை…. திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு..

திருப்பதி லட்டு என்பது திருப்பதி கோயிலில் பெருமாளுக்கு நைவேத்யமாக வழங்கப்படும் இனிப்பு. கோயிலில் தரிசனம் செய்த பிறகு பக்தர்களுக்கு இது பிரசாதமாக வழங்கப்படுகிறது. தற்போது லாக்டவுனால் திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் வருகை நின்று போனதால் லட்டு விற்பனையும் தடைப்பட்டு போனது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று லட்டு விற்பனை மீண்டும் தொடங்கியது. முதல் நாளில் 2.4 லட்சம் லட்டுகள் விற்பனையானதாக தகவல். பொதுவாக ஒரு லட்டு 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். ஆனால் தற்போது லாக்டவுன் காலத்தில் சலுகை விலையில் ஒரு லட்டு ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருப்பதி லட்டு பிரசாதம் ஆன்லைனில் விற்பனை…. திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு..

இந்நிலையில் நேற்று ஆந்திர பிரதேசத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், தேவஸ்தான கல்யாண மண்டபங்களிலும் திருப்தி லட்டு பிரசாதம் விற்பனை மீண்டும் தொடங்கியது. திருப்பதி லட்டு ஆன்லைனிலும் விற்பனை செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்கள் அருகிலுள்ள டி.டி.டி. தகவல் மையம் அல்லது டி.டி.டி. கல்யாண மண்டபத்தில் லட்டுகளை பெற்று கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மேலும் லட்டுக்களை எடுத்து சென்று சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள பக்தர்களுக்கு விற்பனை செய்யுமாறு தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் தெலங்கானா அரசுகளுக்கு தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.