புனிதநீரில் மயக்க மருந்து… பாலியல் வன்கொடுமை… ஆபாச புகைப்படம்!- மதபோதகரால் நண்பனின் மனைவிக்கு நடந்த கொடுமை

புனித நீர் கொடுப்பதாக கூறிய நண்பனின் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த மதபோதகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் வசித்து வருபவர் முகமது ஃபாருக். மதபோதகரான இவரும் முகமது அஸ்லாமும் நண்பர்கள். அஸ்லாம், கே.கே நகரைச் சேர்ந்த பர்வீன் என்ற பெண்ணை கடந்த 2008 ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். அனைத்து வகையிலும் எனக்கு முகமது ஃபாரூக்தான் செய்து வந்துள்ளார் என்று நண்பரை பற்றி அவரது மனைவி பர்வீனிடம் சொல்லி வந்திருக்கிறார் அஸ்லாம். நகையும் சதையும் போல் இருந்த இவர்களது நட்பு நாளடைவில் இணைபிரியாத அளவுக்கு சென்றவிட்டது.

இதனை பயன்படுத்திக் கொண்ட முகமது ஃபாரூக், தனது நண்பன் அஸ்லாமிடம், “என்னிடம் புனித நீர் இருக்கிறது. இந்த நீர் யாருக்கும் கிடைக்காது. இதனை உன் மனைவிக்கு கொடுக்கிறேன்” என்று சொல்லியுள்ளார். இதனை நம்பிய அஸ்லாம், தனது மனைவிக்கு கொடுக்க சம்மதித்துள்ளார். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட முகமது ஃபாரூக், புனித நீர் என்ற பெயரில் தண்ணீரில் மயக்க மருந்து கொடுத்துள்ளார். மயக்கம் அடைந்த பர்வீனை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் முகமது ஃபாரூக். மேலும் அவரிடம் இருந்து 25 பவுன் நகைகளையும் பறித்துள்ளார். இதற்கு முகமது ஃபாரூக்கின் மனைவி பாத்திமாவும் உடந்தையாக இருந்துள்ளார். முகமது ஃபாரூக்கால் பல கொடுமைகளை அனுபவித்து வந்த பர்வீன், ஒரு கட்டத்தில் திருச்சி கண்டோன்மெண்ட் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் முகமது பாரூக் மற்றும் அவரது கணவர் முகமது அஸ்லாம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், “முகமது ஃபாருக்கும் அஸ்ஸாமும் நண்பர்கள். அஸ்லாமுக்கு குடும்பம் நடத்த பணப்பிரச்னை இருந்துள்ளது. இதனால் அவரது மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் மத போதகரான முகமது ஃபாருக்கை வீட்டிற்கு அழைத்து வந்து யாசகம் செய்திருக்கிறார். அடிக்கடி நண்பரின் வீட்டிற்கு முகமது ஃபாரூக் சென்றிருக்கிறார். அப்போது, பர்வீனாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனை பயன்படுத்திக் கொண்ட ஃபாரூக், அஸ்லாமிடம், உன் மனைவியால்தான் ஒருசில பிரச்னைகள் ஏற்படுகிறது. அவரை தனி அறையில் வைத்து அவருக்குப் புனித நீர் கொடுக்கவேண்டும். அந்த நீரைக் கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு அவர்களும் ஒத்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் வைத்திருந்த மயக்க மருந்து நீரைப் புனித நீர் என்று பர்வீனுக்கு கொடுத்துள்ளார். தீர்த்தத்தைக் குடித்த அந்த பெண் மயங்கிய பின்னர் அவரை பாலியல் கொடுமை செய்ததுடன் அவர் வைத்திருந்த 25 பவுன் மற்றும் பணத்தைத் திருடிச் சென்றுள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த பர்வீன், தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாரூக், நண்பரின் வீட்டிற்குச் செல்வதுபோல் பலமுறை பர்வீனை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, நிர்வாணமாக போட்டோ எடுத்திருக்கிறார். இதனை தனது கணவர் அஸ்லாமிடம் சொல்லிருக்கிறார் பர்வீன். ஆனால், அவர் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் ஃபாரூக்கின் சித்ரவதை தாங்க முடியாமல் எங்களிடம் புகார் கொடுத்திருக்கிறார். புகாரின் பேரில் முகமது ஃபாரூக்கையும், அஸ்லாமையும் கைது செய்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

Most Popular

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை...

`குளிக்கச் சென்றவர் சடலமாக கிடந்தார்!’- திருமணமான 45வது நாளில் இளம்பெண்ணுக்கு நடந்த துயரம்

திருமணமான 45-வது நாளில் குளிக்கச் சென்ற இளம்பெண் குளியலறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் டவுன் பகுதியைச்...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் மதிப்பும், மரியாதையும் கூடும்!

இன்றைய ராசிபலன்கள் 06-07-2020  (திங்கட்கிழமை) நல்லநேரம் காலை 6.15 முதல் 7.15 வரை மாலை 4.45 முதல் 5.45 வரை ராகுகாலம் காலை 7.30 முதல் 9 வரை எமகண்டம் காலை 10.30 முதல் 12 வரை மேஷம் பணவரவு அதிகரிக்கும். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆதரவும்...

அடுத்தடுத்து திருப்பங்கள். பா.ஜ.க. தலைவர் நட்டாவை சந்திக்கும் சச்சின் பைலட்…பெரும்பான்மையை இழக்கும் காங்கிரஸ்

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட நாட்களாக மன கசப்பு இருந்து வந்தது. தற்போது...
Open

ttn

Close