`ஜாலியாக திரிகிறார்கள்; இவர்களால் எங்களுக்குத்தான் பாதிப்பு!’- கொரோனா பீதியில் திருச்சி மக்கள்

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் வெளியில் ஜாலியாக சுற்றித் திரிவதாகவும், இவர்களால் எங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.

கொரோனா அச்சத்தால் வெளிநாடுகளில் வேலை செய்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் சொந்த ஊர் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இந்தநிலையில் சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் 145 பேர் திருச்சி விமான நிலையம் வந்தனர். அவர்களை தனிமைப்படுத்த 4 குழுக்களாக பிரித்த அதிகாரிகள், திருச்சியில் உள்ள பல்வேறு தனியார் விடுதிகளில் தங்க வைக்க முடிவு செய்தனர்.

இந்த நிலையில், திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள இப்ராஸ் மற்றும் இம்பீரியல் என்ற விடுதிகளில் தலா 30 பேர் தங்கவைக்கப்பட இருந்தனர். இது குறித்த விவரம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் விடுதிகளில் காந்தி நகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குவிந்தனர். அப்போது அவர்கள், “வெளிநாட்டில் இருந்து வந்துள்ள பயணிகளை தனியார் ஓட்டலில் தங்க வைப்பதற்கு அனுமதிக்க கூடாது. அவர்களால் இப்பகுதி மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது” என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இந்த இடமே பதற்றத்துடன் காணப்பட்டது. தகவல் அறிந்தது சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தார் திருச்சி கிழக்கு தாசில்தார் மோகன். அப்போது, பொதுமக்களிடம் அவர் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து 60 பயணிகளும் ஸ்ரீரங்கத்தில் உள்ள விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ” வெளிநாடு மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களால் தான் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவிக்கொண்டிருக்கிறது.திருச்சி மாவட்டத்தில் 503 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாங்கள் நெருக்கமாக உள்ள வீடுகளில் வசித்து வருகிறோம். இங்கு சிறுவர்கள் முதியவர்கள் அதிகம் பேர் வசிக்கிறார்கள். இந்நிலையில் சார்ஜாவிலிருந்து வந்தவர்களை இங்கு தங்க வைத்தால் இவர்கள் மூலமாக எங்கள் பகுதியில் வைரஸ் பரவல் வந்துவிடாதா? அதனைத்தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்தப்படுவர்கள் சுதந்திரமாக இரவு நேரத்தில் சுற்றிக்கொண்டு திரிகிறார்கள். இவர்களால் எங்களுக்கு தொற்று பரவும் அபாயம் இருக்கிறது. இதனால்தான் போராட்டம் நடத்தினோம்” என்றனர்.

Most Popular

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார்(19), கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த...

கேரளாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...

இ-பாஸ் நடைமுறை எதற்கு?- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் லட்சக்கணக்கானோர் சொந்த...

பாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...