25 பேர் சாட்சிகள்… உச்சப்பட்ட தண்டனை கிடைக்கும்!- கொள்ளையன் முருகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

திருச்சியில் பிரபல நகைக்கடை கொள்ளை வழக்கில் பிரபல கொள்ளையன் முருகன் உள்பட 5 பேர் மீது கோட்டை காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

திருச்சியில் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி லலிதா ஜூவல்லரியில் ரூ.13 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக் கப்பட்டன. இது தொடர்பாக கோட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருவாரூரைச் சேர்ந்த கொள்ளையன் முருகனின் சகோதரி கனகவல்லி (57), மணி கண்டன் (34), மதுரை மாவட்டம் தெத்தூர் மேட்டுப்பட்டி கணே சன் (35) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கின் முக்கிய நபரான திருவாரூர் முருகன் (46) தலைமறைவானார். அவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், கடந்தாண்டு அக்டோபர் 11-ம் தேதி பெங்களூரூ நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் முருகனின் மைத்துனர் சுரேஷ் (28) அதே ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி செங்கம் நீதி மன்றத்தில் சரணடைந்தனர். இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணைக்கு பிறகு 25 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, முருகன் உள்ளிட்டவர்களை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். முருகனை கைது செய்து 162 நாட்கள் ஆன நிலையிலும் கோட்டை போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யா ததால் அவருக்கு ஜாமீன் வழங்கியது திருச்சி ஜே.எம்-1 நீதிமன்றம் இதைத் தொடர்ந்து, விரிவான குற்றப் பத்திரிகை தயார் செய்யும் பணி மீண்டும் முழுவீச்சில் காவல்துறையினர் மேற்கொண்டனர். கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய அப்போதைய இன்ஸ்பெக்டர் கோசலைராம் உட்பட 25 பேரை சாட்சிகளாகக் கொண்டு, முருகன், சுரேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை ஜே.எம்-1 நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, “முருகன் உள்ளிட்டோருக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரும் வகையில் குற்றப் பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். அதற்கு நீதிமன்ற விசாரணை எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. முருகன் உள்ளிட்டோருக்கு விரைவில் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட இருக்கிறது” என்றார்.

Most Popular

ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தார் கையும் களவுமாக பிடிபட்டார்!! (வீடியோ)

தெலங்கானாவில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மல்காஜிரி மாவட்டத்தில் உள்ள கீசாரா மண்டலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு...

குடும்பத்தினருடன் உங்கள் 2 ஆவது இன்னிங்சை தொடங்க தோனிக்கு சச்சின் வாழ்த்து!

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி...

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பற்ற நாடாகிவிடும்: அதிபர் ட்ரம்ப்

ஜோபிடன் அதிபரானால் அமெரிக்காவில் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு...

தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியது ரஷ்யா!

ரஷ்யா அறிமுகம் செய்த கொரோனா தடுப்பு மருந்தான 'ஸ்புட்னிக் v' இன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் உலக நாடுகளிடையே...
Do NOT follow this link or you will be banned from the site!