வாலிபரின் நெஞ்சில் பச்சை குத்தப்பட்ட மாணவியின் பெயர்… நீண்ட செல்போன் உரையாடல்… பெற்றோர் கண்டிப்பு!- சிக்கிய 2 பேரால் திருச்சி வழக்கில் திடீர் திருப்பம்

வாலிபரின் நெஞ்சில் பச்சை குத்தப்பட்ட மாணவியின் பெயர்… நீண்ட செல்போன் உரையாடல்… பெற்றோர் கண்டிப்பு!- சிக்கிய 2 பேரால் திருச்சி வழக்கில் திடீர் திருப்பம்

திருச்சியில் மாணவி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் உறவினர்கள் இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒருவர் மாணவியின் பெயரை தனது நெஞ்சில் பச்சை குத்திவைத்துள்ளது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாலிபரின் நெஞ்சில் பச்சை குத்தப்பட்ட மாணவியின் பெயர்… நீண்ட செல்போன் உரையாடல்… பெற்றோர் கண்டிப்பு!- சிக்கிய 2 பேரால் திருச்சி வழக்கில் திடீர் திருப்பம்

திருச்சி மாவட்டம், அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி-மகேஸ்வரி தம்பதியின் மகள் கங்காதேவி. 9ஆம் வகுப்பு படித்து வந்த இவர், வீட்டின் அருகிலுள்ள பாலத்தின் அடியில் பாதி எரிந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டார். இந்த கொலை குறித்து திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா , எஸ்.பி ஜியாவுல் ஹக் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். இதையடுத்து, குற்றவாளிகளை பிடிக்க டி.எஸ்.பி தலைமையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கங்காதேவியின் உடல் முட்புதரில் கிடப்பதாக முதலில் உறவினர்கள் செந்தில் மற்றும் சசிகுமார் ஆகியோர் கூறியுள்ளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அண்ணன் முறையான செந்திலுக்கும் கங்காதேவிக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் செந்தில் தனது நெஞ்சில் கங்காதேவியின் பெயரை பச்சை குத்தியிருக்கிறார். அவருடன் கங்காதேவி நீண்ட நாட்களாக செல்போனில் பேசியிருப்பது தெரியவந்துள்ளது. அப்போது, கங்கா தேவியை பெற்றோர் கண்டித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இருந்தாலும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தால்தான் கொலைக்கான காரணம் தெரியவரும்” என்றனர்.

வாலிபரின் நெஞ்சில் பச்சை குத்தப்பட்ட மாணவியின் பெயர்… நீண்ட செல்போன் உரையாடல்… பெற்றோர் கண்டிப்பு!- சிக்கிய 2 பேரால் திருச்சி வழக்கில் திடீர் திருப்பம்

“மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்ல வாய்ப்பில்லை. எங்கள் சந்தேகம் செந்தில், சசிகுமார் மீது இருக்கிறது. மாணவி கொல்லப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துக் கொண்டாரா என்று விசாரித்து வருகிறோம்” என்கிறார் திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா.

இந்த நிலையில், மாணவி கொல்லப்பட்ட சம்பவத்தை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியிருக்கிறது.

இதனிடையே, கங்கா தேவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டது. “நேர்மையான முறையில் பிரேதப் பரிசோதனை அறிக்கை வரவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் “என்று அவரது உறவினர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தினர்.