பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

 

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சஷ்டி திருவிழா கடந்த 15 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கி 26-11-20 வரை நடைபெறவுள்ளது. கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோவில் பிரகாரத்தில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. வழக்கமாக கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சி கொரோனா பரவலால் கோவில் பிரகாரத்தில் நடத்தப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. மேலும் சூரசம்ஹார நிகழ்ச்சி உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல் மூலம் ஒளிப்பரப்படும். சூரசம்ஹாரம் 20 ஆம் தேதியும், திருக்கல்யாணம் 21 ஆம் தேதியும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் கடற்கரை நுழைவாயிலில் நிகழ்ச்சியை நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கடற்கரையில் நடத்த முடிவு செய்துள்ள மாவட்ட நிர்வாகம் அதற்காக கடற்கரை பகுதியை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுவருகிறது.