darbar
  • January
    21
    Tuesday

Main Area

Main



திருச்சி செல்லம்மாள் மண்பானை சமையல்… மகளிர் மட்டும் ஸ்பெஷல்...

​  செல்லம்மாள் மண்பானை சமையல்
​ செல்லம்மாள் மண்பானை சமையல்

திருச்சி புத்தூரில் இருக்கும் அரசு மருத்துவ மனைக்கு எதிரில் செல்லும் சாலையில் ஆஃபீஸர்ஸ் காலணியில் இருக்கிறது இந்த உணவகம்.முழுவதும் பெண்களே பணிபுரிகிறார்கள் என்பது தொடங்கி எல்லாமே. புதுமையாகச் செய்திருக்கிறார் இந்த சைவ உணவகத்தை உருவாக்கிய செல்லம்மாள்.

manpannai samayal

செல்லம்மாள் ஒரு மகளிர் விடுதியும் நடத்துகிறார்.அதில் தங்கியிருக்கும் பெண்களுக்காக ஒரு மெஸ் ஆரம்பித்த போதுதான் அவருக்கு இப்படி ஒரு உணவகம் தொடங்கும் யோசனை வந்திருக்கிறது.பொதுவாகவே திருச்சியில் சைவம் ,அசைவம் இரண்டு வகையிலுமே பல பிரபல உணவகங்கள் இருப்பதால், தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக செல்லம்மாள் தேர்ந்தெடுத்த வழிதான் பாரம்பரிய மண்பானை சமையல்.

நாம் மறந்துபோன,ஆனால் நம் நாக்கு நினைவு வைத்திருக்கும் பழைமையான பல பண்டங்கள் இங்கே தினமும் கிடைக்கின்றன.நீங்கள் அமர்ந்ததும் உங்கள் முன்னால் இலையை போட்டு விட்டு அவர்கள் சொல்லும் பதார்த்தங்களின் பெயர்களை கேட்கும் போதே நாவூரும்.தினமும் 32 வகையான பண்டங்கள் இங்கே தயாரிக்கப் படுகின்றன. 

chellamal

சாப்பாடு தவிர, உங்களுக்கு தேவையான குழம்புகள் தொடுகறிகளை நீங்களே தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்.சாம்பார் தவிர,பருப்புருண்டைக் குழம்பு,மோர் குழம்பு,வற்றல் குழம்பு,புளிக் குழம்பு,காரக்குழம்பு, வெந்தயக்குழம்பு என்று பலவிதமான குழம்புகள்.

கீரை என்றால்,கீரை மசியல்,கீரைக் கூட்டு,புளிக்கூட்டு,கீரைப்பொறியல் என்று அதிலும் பலரகங்கள்.இதே போல தொடுகறிகள்,ரசம்,பாயச வகைகள் என்று எல்லாவற்றிலும் வெரைட்டி காட்டுகிறார்கள். உங்களுக்குத் தேவையான ஐட்டத்தைக் கேட்டால் சிறிய அழகிய மண் குவளையில் கொண்டுவந்து வைக்கிறார்கள். சோறு முதல் தயிர் வரை எல்லாமே மண் பாண்டங்களில்தான் தரப்படுகின்றன.நீங்கள் சாப்பிட்டு முடித்ததும் பாத்திரங்களை எண்ணிப் பார்த்து பில் தருகிறார்கள்.

chellamal

நீங்கள் பில் பணத்தை கொடுக்க வந்தால் அங்கும் கருப்பட்டி மிட்டாய்,கடலை மிட்டாய்,எள்ளுருண்டை என்று அடுக்கி வைத்திருக்கிறார்கள்.தொடங்கிய சில வருடங்களிலேயே திருச்சியில் அவசியம் தவரவிடக்கூடாத ஹோட்டல்கள் லிஸ்ட்டில் இடம் பிடித்து விட்டது இந்த மகளீர் மட்டும் உணவகம்.

2018 TopTamilNews. All rights reserved.