திப்புசுல்தான் பாடம் நீக்கம் இல்லை… கர்நாடக அரசு அறிவிப்பு

 

திப்புசுல்தான் பாடம் நீக்கம் இல்லை… கர்நாடக அரசு அறிவிப்பு

கர்நாடகாவில் பாடச் சுமை குறைப்பு என்ற பெயரில் திப்புசுல்தான் பற்றிய பாடம் நீக்கப்பட்ட அறிவிப்பைத் திரும்பப் பெறுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்க முடியாத நிலையில், பள்ளிகள் செயல்படும் குறுகிய காலத்துக்கு ஏற்ப பாடப் புத்தகங்களில் இருந்து சில பாடங்கள் நீக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திப்புசுல்தான் உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

திப்புசுல்தான் பாடம் நீக்கம் இல்லை… கர்நாடக அரசு அறிவிப்பு
இதற்கு கர்நாடக காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அரசு இந்த முடிவைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து பேட்டி அளித்த கர்நாடக கல்வித் துறை அமைச்சர் சுரேஷ் குமார், “பள்ளி பாடத்திட்டத்திலிருந்து பாடங்களை நீக்குவது குறித்து எந்த ஒரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. அதனால், பள்ளி கல்வித் துறை பாடங்களை நீக்காது” என்றார்.

திப்புசுல்தான் பாடம் நீக்கம் இல்லை… கர்நாடக அரசு அறிவிப்பு
இதைத் தொடர்ந்து கர்நாடக பொதுக் கல்வித் துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், “கர்நாடகாவில் பள்ளிகள் திறக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் 120 நாட்களுக்கு பாடம் நடத்தும் வகையில் பாடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடங்களில் சிலவற்றை குறைத்து உத்தரவிடப்பட்டது. தற்போது கல்வித் துறை அமைச்சரின் ஆலோசனையின்படி, 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடங்களை குறைக்க எடுக்கப்பட்ட முடிவு நிறுத்தி வைக்கப்படுகிறது. இணையதளத்தில் நீக்கப்பட்ட பாடங்கள் மீண்டும் பதிவேற்றம் செய்யப்படும்” என்றார்.