Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் கொசுவை விரட்டுற மாதிரி குழந்தைகளை பயமுறுத்தும் அடுத்த அலையை விரட்டலாம் வாங்க

கொசுவை விரட்டுற மாதிரி குழந்தைகளை பயமுறுத்தும் அடுத்த அலையை விரட்டலாம் வாங்க

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையால் இந்தியாவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு சிகிச்சை அளிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. அலோபதியைத் தவிர, ஆயுர்வேதம், சித்த வைத்தியம், கைவைத்தியம் என்று மக்கள் மாற்று மருத்துவத்தையும் பயன்படுத்துகின்றனர்.

கொசுவை விரட்டுற மாதிரி குழந்தைகளை பயமுறுத்தும் அடுத்த அலையை விரட்டலாம் வாங்க

இதைப் பயன்படுத்தி வருமானம் பார்த்து கல்லா கட்டும் சம்பவஙக்ளும் அதிகரித்துவிட்டன. எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று, நம்பி ஏமாறும் அப்பாவி மக்களின் எண்ணிக்கைக்கும் குறைவில்லை.மேலும் அடுத்த அலை குழந்தைகளை தாக்கும் என சிலர் பயமுறுத்துகின்றனர் .அதனால் இப்போதிலிருந்தே சில உணவுகளை தவிர்த்தால் நோய் எதிர்ப்பை உருவாக்கலாம்

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் இதையெல்லாம் தவிர்த்தால் ,வைரஸ் தாக்குதலையும் தவிர்க்கலாம் .

கொசுவை விரட்டுற மாதிரி குழந்தைகளை பயமுறுத்தும் அடுத்த அலையை விரட்டலாம் வாங்க

ஐஸ்கிரீம்

5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் தரக் கூடாது. சளி, காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். ஐஸ்கிரீம் தயாரிக்கும் தண்ணீர் சுகாதாரமின்றி இருந்தால் குழந்தைகளை நிச்சயம் பாதிக்கும். குழந்தைகளுக்கு நீங்கள் வீட்டிலே தயாரித்த பழக்கூழை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துக் கொடுக்கலாம். இதை ஹோம்மேட் ஐஸ்கிரீம் எனச் சொல்லி கொடுங்கள்.

நூடுல்ஸ்

முழுக்க மைதாவில் செய்யப்படும் உணவு. இதனுடன் வரும் மசாலாவில் சுவையூட்டியும் அதிகபடியான உப்பும் மோனோ சோடியம் குளுட்டமேட் எனும் கெமிக்கலும் கலக்கப்படுகின்றன. இதில் கலக்கப்பட்டிருக்கும் அதீத உப்பால் உடல்நலக் கோளாறுகள் வரும். இந்த நூடுல்ஸ் செரிக்க 2-3 நாட்கள் ஆகும். அவ்வளவு நாள் வயிற்றுக்குள் இருந்து கெட்டு போய், மலக்காற்று துர்நாற்றமாக வரும். இதைக் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது.

ராகி சேமியா, இடியாப்ப சேவை போன்றவற்றில் காய்கறிகள் சேர்த்து வீட்டிலே அரைக்கக் கூடிய மசாலா சேர்த்து நூடுல்ஸ் எனச் சொல்லி குழந்தைக்கு கொடுக்கலாம்.

பாக்கெட் உணவுகள்

ஒரு வாய் வைத்த உடனே சட்டென்று சுவை நாவில் ஒட்டிக் கொள்ளும். அந்த அளவுக்கு சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. சில பாக்கெட் நொறுக்கு தீனிகளில் மெழுகு சேர்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது. நெருப்பில் இட்டால் அவை எரியும். இது குழந்தைகளின் வயிற்றுக்குள் சென்று பல்வேறு உபாதைகளை உருவாக்கும். பாக்கெட் நொறுக்கு தீனிகளைத் தவிர்த்து விட்டு வீட்டிலே செய்யகூடிய ஆரோக்கிய நொறுக்கு தீனிகளைக் கொடுக்கலாம். கடலைமிட்டாய், எள்ளு உருண்டை, முறுக்கு போன்றவற்றை வீட்டிலே செய்து கொடுக்கலாம்.

சிப்ஸ் வகைகள்

ஏராளமான சிப்ஸ்கள் தற்போது கிடைக்கின்றன. உருளைக்கிழங்கு, மரவள்ளிகிழங்கு, பாகற்காய், பலா, வெண்டைக்காய் போன்ற நிறைய சிப்ஸ்கள் உள்ளன. இவையெல்லாம் காய்கறிகளாக இருந்தாலும் இதைப் பொரிக்க கூடிய எண்ணெயில்தான் பிரச்னை இருக்கிறது. மீண்டும் மீண்டும் சுட கூடிய எண்ணெயில் கெட்ட கொழுப்பு மிகுதியாக இருக்கும். இதனால் உடல்பருமன், தொப்பை, வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல் போன்ற தொல்லைகள் வரும். குழந்தைகள் விருப்பப்பட்டால் வீட்டிலே தரமான எண்ணெயில் பொரித்து, கொஞ்சமாக மிளகுத் தூள் தூவி கொடுக்கலாம். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தரலாம்.

கடையில் பொரித்த எண்ணெய் உணவுகள்

கடையில் விற்கும் பொரித்த எண்ணெய் உணவுகளான சமோசா, பக்கோடா, ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் போன்ற திண்பண்டங்களை வாங்கித் தர கூடாது. வேண்டுமென்றால் வீட்டிலே செய்து கொடுங்கள். கடைகளில் பொரிக்கும் எண்ணெயும் மீண்டும் மீண்டும் பயன்படுத்த கூடியதாக இருக்கிறது. இதனால் வயிறு கெடும். வயிறு தொடர்பான தொல்லைகள் வரும்.நீங்கள் வீட்டிலே ஆரோக்கியமான முறையில் பஜ்ஜி, போண்டா, வடை செய்து கொடுக்கலாம். 

குளிர்பானங்கள்

இந்தக் குளிர்பானங்கள் மிகவும் ஆபத்தானது. இதன் லேபிள் கீழேயே இதைச் சாப்பிட கூடாது. குழந்தைகள், கர்ப்பிணிகளுக்குக் கொடுக்க கூடாது என எழுதி இருப்பார்கள். மேலும் பழங்களின் சுவைகளில் வரும் சில குளிர்பானங்கள், செயற்கை பழச்சாறுகள், செயற்கை மில்க் ஷேக் போன்ற அனைத்தையும் குழந்தைகளுக்கு தரக் கூடாது. ஏனெனில் உணவுப் பொருட்கள் ஃப்ரெஷ்ஷாகதான் சாப்பிட வேண்டும். உணவுகள் 2-3 நாட்களில் கெட்டு போகும். ஆனால் கடைகளில் விற்கப்பட்டும் பாட்டில் பழச்சாறுகள், மில்க் ஷேக் 2 -6 மாதங்கள் வரை கெட்டுப் போகாது. அவ்வளவும் கெமிக்கல்கள். இது குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களுக்கும் ஆபத்துதான்.

கொசுவை விரட்டுற மாதிரி குழந்தைகளை பயமுறுத்தும் அடுத்த அலையை விரட்டலாம் வாங்க
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கடவுளின் அவதாரம் அழைத்துக்கொள்ளும் சிவசங்கருக்கு மீண்டும் சம்மன்

கடவுளின் அவதாரம் என தன்னை அழைத்துக் கொள்ளும் சிவசங்கர் பாபா மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக அவருக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

காஷ்மீர் விவகாரம்.. திக்விஜய சிங் பேசிய ஆடியோவை வெளியிட்ட பா.ஜ.க… சிக்கலில் காங்கிரஸ்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங், பாகிஸ்தான் செய்தியாளரிடம் பேசிய ஆடியோ ஒன்றை...

அண்ணா பல்கலை விருப்ப பாடங்களில் 9வது பாடமாக தமிழ் இணைக்கப்படும் – அமைச்சர் பொன்முடி

அண்ணா பல்கலைக்கழக விருப்ப பாடங்களில் 9வது பாடமாக தமிழ் மொழி இணைக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப...

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல்.. 25 ஆண்டுகளுக்கு பிறகு மாயவாதி கட்சியுடன் கூட்டணி வைக்கும் அகாலி தளம்

எதிர்வரும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில், 25 ஆண்டுகளுக்கு பிறகு பகுஜன் சமாஜ் கட்சி, சிரோன்மணி அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட உள்ளது. பஞ்சாபில்...
- Advertisment -
TopTamilNews