உங்க சருமம் டீ ஹைட்ரேட் ஆகுதா?.. தவிர்ப்பதற்கு சில டிப்ஸ் இதோ!

 

உங்க சருமம் டீ ஹைட்ரேட் ஆகுதா?.. தவிர்ப்பதற்கு சில டிப்ஸ் இதோ!

டீ ஹைட்ரேஷன் என்று சொல்லக்கூடிய நீரிழப்பு சருமம் பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்னை தான். டீ ஹைட்ரேஷனால் பொதுவாக நம் சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசை முற்றிலுமாக குறைந்து, உலர்தன்மை அதிகரித்து விடும் இது சருமத்தை இறுக்கமாக்கி, வறட்சி தன்மையை அதிகரிக்கச் செய்யும். சிலருக்கு சாதாரணமாகவே டீ ஹைட்ரேட் ஆகும், சிலருக்கு காலநிலை மாற்றங்களின் போது ஆகும். தண்ணீர் குறைவாக இருப்பதால் தான் டீ ஹைட்ரேஷன் ஏற்படுவதாக கூறப்படும் நிலையில், அதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்…

உங்க சருமம் டீ ஹைட்ரேட் ஆகுதா?.. தவிர்ப்பதற்கு சில டிப்ஸ் இதோ!

அறிகுறி என்ன?

சருமத்தில் ஈரப்பதமே இல்லாமல், சருமம் மிகவும் இறுக்கமாக இருக்கும் நிலை தான் டீ ஹைட்ரேஷன். இது நம் உடலில் தோல் உரிதல், சோர்வை உண்டாக்குதல், வாய் உலர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அறிகுறிகளை உண்டாக்கும். டீ ஹைட்ரேஷன் மிக அதிகமாக இருந்தால், சில சமயங்களில் அரிப்பு, குறைந்த இரத்த அழுத்தம், தலைவலி, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளும் கூட ஏற்படும். சரி இதற்கான காரணங்களை இனி பார்க்கலாம்..

உங்க சருமம் டீ ஹைட்ரேட் ஆகுதா?.. தவிர்ப்பதற்கு சில டிப்ஸ் இதோ!

தண்ணீர் குடிக்காமல் இருப்பது:

ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறியவர்களாக இருந்தால் 2 லிட்டர் தண்ணீர் வரை குடிக்க வேண்டும். அப்போது தான் நம் உடலில் நீரேற்றம் அதிகரித்து, சருமம் டீ ஹைட்ரேட் ஆகாமல் இருக்கும். மாய்சுரைசர் போட்டால் மட்டும் சருமம் ஈர்ப்பதத்துடன் இருக்கும் என்று நினைப்பது தவறு. தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் சருமத்தின் பளபளப்பு கூடும். நீங்களே அதை ட்ரை செய்து பார்க்கலாம்.

உங்க சருமம் டீ ஹைட்ரேட் ஆகுதா?.. தவிர்ப்பதற்கு சில டிப்ஸ் இதோ!

நீரை உறிஞ்சும் ஏசி:

குளிர்காலத்தை விட கோடைகாலத்தின் தான் நாம் அதிகமாக ஏசியை பயன்படுதிவோம். கோடைக்காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உடல் எளிதில் டீ ஹைட்ரேட் ஆகிவிடும். அந்த சமயத்தில் வெகு நேரம் ஏசியில் இருந்தால் உடலில் இருக்கும் கொஞ்சம் நீரையும் ஏசி உறிஞ்சுவிடும். இதனால் சருமம் வெகு விரைவில் டீ ஹைட்ரேட் ஆகும். முடிந்த அளவுக்கு காற்றோட்டமான இடத்தில இருப்பது சிறந்தது.

உங்க சருமம் டீ ஹைட்ரேட் ஆகுதா?.. தவிர்ப்பதற்கு சில டிப்ஸ் இதோ!

அதிகம் நேரம் குளிப்பது:

தண்ணீரில் அதிகமாக இருக்கும் போது சீக்கிரமாக டீ ஹைட்ரேட் ஆகக்கூடும். நீச்சல், நீண்ட நேர குளியல் உள்ளிட்டவை இதற்கு உதாரணம். வெகு நேரம் நீரில் இருந்தால் நம் கை மற்றும் கால்களின் தன்மை மாறுபடுவதை பல முறை உணர்ந்திருப்போம். நீரில் நாம் அதிக நேரம் இருக்கும் போது தோலில் இருக்கும் செல்கள் நீரில் கரைந்து விடுமாம். அதனால், நீரில் அதிக நேரம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

உங்க சருமம் டீ ஹைட்ரேட் ஆகுதா?.. தவிர்ப்பதற்கு சில டிப்ஸ் இதோ!

காலநிலை மாற்றம்:

ஒவ்வொரு கால நிலைக்கு ஏற்றாற்போல நம் சருமத்தின் தன்மை மாறுபடும். மழைக்காலம், கோடைக்காலம், குளிர்காலம் என ஒவ்வொரு வானிலைக்கும் சருமத்திற்கு அதற்குரிய பராமரிப்பு அவசியமாகிறது. கோடைக்காலத்தில் வெயிலில் நிற்கும் போதும் சரி, மலைப்பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசினாலும் சரி நம் உடலில் நீரிழப்பு ஏற்படும். அதனால், நம் சருமத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.

உங்க சருமம் டீ ஹைட்ரேட் ஆகுதா?.. தவிர்ப்பதற்கு சில டிப்ஸ் இதோ!

வயது அதிகரிப்பு:

சிறிய வயதில் இருந்தே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களுக்கு டீ ஹைட்ரேஷன் அவ்வளவாக இருக்காது. சருமத்திலும் பெரிதாக மாற்றங்கள் இருக்காது. வயதாகும் போது சருமத்தில் இருக்கும் செபாசியஸ் என்னும் சுரப்பி தானாக குறைவதால் ஈரப்பதம் குறையும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது சிறந்தது.