அதிகமாக முடி கொட்டுகிறதா?.. அப்போ இதையெல்லாம் பண்ணுங்க!

 

அதிகமாக முடி கொட்டுகிறதா?.. அப்போ இதையெல்லாம் பண்ணுங்க!

உலகில் பெரும்பாலான பெண்களுக்கு தங்கள் முடி பிடிப்பதில்லை. இதற்கு காரணம் அவர்கள் சந்திக்கும் முடி உதிரல் பிரச்னை தான். இது அவர்களுக்கு மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதை தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டிய சிறிய மாற்றங்களை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்..

ஒரு வாரத்துக்கு இரண்டு முறை தலைக்கு குளிக்க வேண்டும் என்கின்றார்கள் மருத்துவர்கள். தலைக்கு குளித்த பின் அகன்ற பற்களைக் கொண்ட சீப்பை வைத்து தலையை சிக்கு இல்லாமல் சீவ வேண்டும். அப்படியே விட்டுவிட்டால், கூந்தல் பலவீனமடைந்து முடி உதிரல் அதிகமாக இருக்கும். தலைக்கு குளிப்பதற்கு முன்னரும் தலையை நன்றாக சிக்கு இல்லாமல் சீவிவிட்டு தலைக்கு குளிக்க வேண்டும்.

அதிகமாக முடி கொட்டுகிறதா?.. அப்போ இதையெல்லாம் பண்ணுங்க!

ஷாம்பு, கண்டிஷனர்:

தலைமுடிக்கு சரியான ஷாம்பு, கண்டிஷனர் உபயோகப்படுத்துவது அவசியம். சல்பேட் இல்லாத ஷாம்புக்கள் பயன்படுத்துவது சிறந்தது. சிறந்த ஷாம்புவை தேர்ந்தெடுக்க மருத்துவர்களை அணுகுங்கள். நல்ல ஷாம்புவை போட்டு குளித்த பிறகு கண்டிஷனர் பயன்படுத்தி சிறிது நேரம் விட்டு உடனே அலசி விடுங்கள்.

ஹேர் மாஸ்க்:

வாரத்திற்கு ஒரு முறையாவது ஹேர் மாஸ்க் போடுவது கட்டாயம். என்ன தான் நல்ல ஷாம்பு, கண்டிஷனர் பயன்படுத்தினாலும் ஹேர் மாஸ்க் கண்டிப்பாக போட வேண்டும். இது கூந்தலை மென்மையாக வைத்திருக்கும்.

அதிகமாக முடி கொட்டுகிறதா?.. அப்போ இதையெல்லாம் பண்ணுங்க!

உணவு பழக்கம்:

சரியான அளவு சத்துக்களை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பவர்களுக்கு கூட அதிக அளவில் முடி உதிரல் இருக்கும். கூந்தலுக்கு புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். மீன், இறைச்சி, முட்டை உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். சைவம் சாப்பிடுபவர்கள், பெர்ரி, கீரைகள் உள்ளிட்டவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

அதிகமாக முடி கொட்டுகிறதா?.. அப்போ இதையெல்லாம் பண்ணுங்க!

​ஹேர் டிரையர் பயன்படுத்துதல்:

கூந்தலுக்கு அடிக்கடி ஹேர் டிரையர் போடுவது சரியானது அல்ல. அவசர காலங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அடிக்கடி பயன்படுத்தினால் முடி சேதமடைவதோடு முடி பிளவுகள் உண்டாகும். இயற்கையாக முடியை உலர விடுவது தான் சிறந்தது.

சீப்பு:

பெரும்பாலும் வாய் அகன்ற சீப்புக்களை பயன்படுத்துங்கள். இது முடி உடைதலை தடுப்பதோடு, முடி உதிரலையும் கட்டுப்படுத்துகிறது. முடிக்கு ஏற்றாற்போல சீப்புகளை பயன்படுத்துவது நல்லது.

வெந்நீர்:

அடிக்கடி வெந்நீரில் தலைக்கு குளிக்க கூடாது. இது முடி வளர்ச்சியை தடுப்பதோடு, எரிச்சலையும் உண்டாக்கும். எப்போதும் குளிந்த நீரில் தலையை அலசுவதே சிறந்தது. குளிர்ந்த நீரில் குளிப்பது சிலருக்கு கடினமாக இருந்தால், வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.

அதிகமாக முடி கொட்டுகிறதா?.. அப்போ இதையெல்லாம் பண்ணுங்க!

சூரியன்:

சூரிய கதிர்வீச்சு நம் சருமத்தோடு சேர்த்து கூந்தலையும் பாதிக்கும். ஈரத்தன்மையை முற்றிலுமாக உறிஞ்சி விடுவதால் ஆக்ஸிஜனேற்றம் குறைவாக இருக்கும். இதனால் கூந்தலை சூரியனிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். வெளியில் செல்லும் போது பெரும்பாலும் தலையில் கேப் அல்லது துப்பட்டாவை அணிந்து செல்வது நல்லது. அதே போல, தூங்கும் போது கூந்தலை பின்னலிட வேண்டும்.

அதிகமாக முடி கொட்டுகிறதா?.. அப்போ இதையெல்லாம் பண்ணுங்க!

முடி வெட்டுதல்:

முடியை வெட்டினால் முடி வளர்ச்சி தடை படும் என்பது தவறு. ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு முடியை வெட்டுவது அவசியம். முடியை வெட்டவில்லை என்றால் ஸ்பிலிட் எண்ட்ஸ் அதிகமாகி முடி வளர்ச்சி தடைபடும். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முடியை வெட்ட வேண்டும். மேற்கண்ட சில டிப்ஸ்களை முறையாக பின்பற்றினால் முடி உதிரல் கட்டுக்குள் வருவதை நீங்களே உணர முடியும்..!