Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் குறைவது போல் பதுங்கியிருக்கும் கொரானா, நம் மீது பாயாமலிருக்க பல குறுக்கு வழிகள்.

குறைவது போல் பதுங்கியிருக்கும் கொரானா, நம் மீது பாயாமலிருக்க பல குறுக்கு வழிகள்.

கொரோனாவின் இரண்டாவது அலையில், தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாட்டில் குறைந்து வரும் போதிலும், பாதிப்புகள் இன்னும் லட்சக்கணக்கில் தான் உள்ளது. இந்த அலையின் போது, பெருமளவிலான மக்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இருப்பினும், இதில் ஒரு நிம்மதி அளிக்கும் விஷயம் என்னவென்றால், அதிக எண்ணிக்கையிலான மக்கள் குணமடைந்தும் வருகிறார்கள். 

குறைவது போல் பதுங்கியிருக்கும் கொரானா, நம் மீது பாயாமலிருக்க பல குறுக்கு வழிகள்.

இருப்பினும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து விட்டாலும்,  பெரும்பாலான, மக்களுக்கு சோர்வு அதிகம் உள்ளதாகவும், பலவீனமாக உணர்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பதுங்கியிருக்கும் கொரானா நம் மீது பாயாமலிருக்க பின் வரும் முன்னெச்சரிக்கை முறைகளை பின்பற்றினால் அடுத்த அலை வந்தாலும் தப்பிக்கலாம்.

1. அளவற்ற சர்க்கரை

2.உடல் பருமன்

3.கொலஸ்ட்ரால்

4.உயர் ரத்த அழுத்தம்

போன்றவற்றை உடனடியாக குறைக்க வேண்டும் .

ஆன்டிபாடி என்றால் என்ன; கொரோனா தொற்றுடன் போராட அது எவ்வாறு உதவுகிறது?

ஒரு காலகட்டத்தில் உடல் பருமன் என்பது, செழிப்பான வாழ்க்கையை குறிக்கும் அறிகுறியாகக் காணப்பட்டது. ஆனால் உடல் பருமன் பல்வேறு வகையான புற்றுநோய்கள் உருவாகும் அளவிற்கு கொண்டு சென்றுவிடுகிறது. ஈரலைச் சுற்றி கொழுப்பு சேர்வதன் மூலம் செரிமான பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்க்கு ஆளாக வேண்டியதாகிவிடுகிறது.

போர்கள், பஞ்சம் இருந்த காலகட்டத்தில் உடல் பருமன் நோயை காண்பது அரிதாக இருந்தது. ஆனால் இன்று 3 வேளை உணவு மற்றும் பீட்சா, பர்கர் என்ற கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவதால் இந்த நோய்க்கு ஆளாக நேரிடுகிறது.

ஏழைகள் அதிகம் வாழும் ஆப்ரிக்காவில் உடல் பருமன் நோயினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவு. உடல் பருமன் நோயினால், 49 சதவீதம் இருதய நோய்கள், 38 சதவீதம் மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள், 19 சதவீதம் புற்றுநோய் ஏற்படுகின்றன.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குத்தான் கொரோனா தொற்று, உயிருக்கு அதிக ஆபத்தை உருவாக்குவதாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள, உடல் பருமன் நோயுள்ளவர்களுக்கும் அதே அளவுக்கு ஆபத்து உள்ளது. இதற்கான தரவுகள் தற்போது கிடைத்து வருகின்றன. தீவிர சிகிச்சைப் பிரிவு, வெண்டிலேசன் ஆகிய சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு இவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

பரம்பரை பிறப்பு, உணவுப் பழக்கம், உடற்பயிற்சி ஆகியவை உடல் பருமனுக்கு மிகுந்த தொடர்புடையவையாக உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, அதிக கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவதோடு, சோம்பேறித்தனம் அதிகமுள்ள நாடாக விளங்குகிறது. அதிக கொழுப்புள்ள உணவுதான் உடல் பருமனுக்கு காரணம் என்று நினைக்கிறோம். ஆனால் முதல் எதிரி சர்க்கரைதான். ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், கேக்குகள் உடல் பருமனுக்கு ஏதுவாக உள்ளன.

உடல் பருமனில் இருந்து விடுபட விரதம் இருக்கலாம். சைக்கிளிங், நடைப்பயிற்சி போன்ற உடல் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். கலோரி குறைவாக உள்ள உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சத்துணவுகள் உணவில் சேர்க்கப்பட வேண்டும். பழங்கள், பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். 

இவற்றை கடைபிடித்தால், நீங்கள் ஆரோக்கிய உடல் நிலையை அடையலாம்.

குறைவது போல் பதுங்கியிருக்கும் கொரானா, நம் மீது பாயாமலிருக்க பல குறுக்கு வழிகள்.
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

உ.பி.யில் கட்டப்பட்ட கொரோனா மாதா கோவிலை இடித்தது மாவட்ட நிர்வாகம்

உத்தர பிரதேசத்தில் கொரோனா மாதா என்ற கோவிலை அமைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ப்ரதாப்கர் மாவட்டத்தின் ஷுலாப்பூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலில் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் கொரோனா மாதா,...

டாஸ்மாக் திறப்புக்கு எதிராக பாஜகவினர் நாளை ஆர்ப்பாட்டம்- எல்.முருகன்

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்தொற்று பரவல் கட்டுக்குள் வராத கோயமுத்தூ, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் ,கரூர், நாமக்கல், தஞ்சாவூர்...

தமிழகத்தில் முற்றிலுமாக குறைந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2கோடியே 94 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 3லட்சத்து 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

‘‘நாயும் வயிற்றை வளர்க்கும்.. ’’-ராமதாஸ் பரபரப்பு பேச்சு

சீர்காழி கோவிந்தராஜனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், இன்றுவரை சீர்காழி கோவிந்தராஜனாருக்கு மணி மண்டபம் கட்டப்படவில்லை. தமிழக அரசு உடனடியாக அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்று...
- Advertisment -
TopTamilNews