போலி மாத்திரைகளால் காலியாகும் உறுப்புகள்-இதை படிச்சிட்டு மாத்திரை போட்டுக்கோங்க.

 

போலி மாத்திரைகளால் காலியாகும் உறுப்புகள்-இதை படிச்சிட்டு மாத்திரை போட்டுக்கோங்க.

இந்தியாவில் போலி மருந்துகள் அதிகம் உலவுகிறது . மருந்து கம்பெனிகள் அதிகலாபம் ஈட்டுவதால் போலி மருந்துகளைத் தயாரிக்க பலர் தயாராக உள்ளனர்.இதனால் மக்களின் உயிருக்கு பேராபத்து நேரிடும். ஒரு மருந்தின் உண்மைத்தன்மையைச் சோதிப்பது கடினம்தான். ஆயினும் கீழ்க்காணும் செய்முறைகளைப் பயன்படுத்தி இதைச் செய்யலாம்.

போலி மாத்திரைகளால் காலியாகும் உறுப்புகள்-இதை படிச்சிட்டு மாத்திரை போட்டுக்கோங்க.

1.மாத்திரை பாக்கெட்டை  சோதிக்கவும்: மருந்தின் உண்மைத்தன்மையைச் சோதிக்க உதவும் மிகச்சுலபமான முறை இது. எழுத்துகளின் ஸ்டைல் , அச்சு வண்ணம் மாறுதல் மற்றும் எழுத்துப்பிழை ஆகியன உள்ளதா என்று பார்க்கவும். முன்பு நீங்கள் பயன்படுத்தியதைவிட இது வித்தியாசமாக இருக்கிறதா என நன்கு ஆராய்ந்து பார்க்கவும்.

2.சீல் உடையாமலிருத்தல்: பாதுகாப்புக்கான சீல் (குறிப்பாக பாட்டிலில்) சேதாரமடையாமல் இருக்க வேண்டும். சீலிங் டேப்பில் விரிசலோ அல்லது இடைவெளியோ இருக்கிறதா எனப் பார்க்கவும்.

3.மாத்திரை /டானிக் உட்கொள்ளும் குறிப்புகளை சோதிக்கவும்: மாத்திரை தோற்றத்தில் (வண்ணம், அளவு, சீராக இருத்தல், வடிவம், ஆகியவை) எந்த மாற்றமாவது தென்படுகிறதா எனப் பார்க்கவும்.

4.மாத்திரை வடிவம் : உலக சுகாதார நிறுவனம் (WHO) சொல்வது போல் மாத்திரைகளில் பின்வரும் பொதுவான வடிவம்  இருக்கிறதா எனப் பார்க்கவும்.

மாத்திரை சிறுதுண்டுகளாக இருத்தல் (அ) மருந்து கண்டெயினரில் அதீத அளவிலான மருந்துப்பொடி

மாத்திரையில் கீறல்/விரிசல் இருத்தல்

மாத்திரை கண்டெயினரில் வேதிப்பொருள் கட்டிகள் இருத்தல்

மாத்திரை மிக மிருதுவாகவோ/மிகக் கடினமாகவோ ஆகிவிடுதல்

மாத்திரையில்  புள்ளி, வண்ணமற்று இருத்தல் (அ) உப்பி விடுதல்

ஆன்லைன் சோதனை:

பார்மாசெக்யூர் இணையதளத்துக்குச் செல்லவும்.

உங்களது நாட்டைத் தேர்வு செய்யவும்.

உங்களது மொபைல் எண்ணையும் மருந்து ஸ்ட்ரிப்பிலுள்ள அதிகாரபூர்வ குறியீடையும் எண்டர் செய்யவும்.

‘வெரிஃபிகேஷன்’ எண்டர் செய்து ‘வெரிஃபை’ பட்டனை அழுத்தவும்.

அவ்வளவுதான்! இதைச் செய்து முடித்தவுடன், இதன் முடிவு உங்களுக்குக் குறுஞ்செய்தி மூலம் கிடைக்கும்.