நோய்கள் ரிவிட் அடிக்காமலிருக்க ,இந்த மாதிரி ஸ்வீட் சாப்பிடுங்க

 

நோய்கள் ரிவிட் அடிக்காமலிருக்க ,இந்த மாதிரி ஸ்வீட் சாப்பிடுங்க

பொதுவாகவே, இனிப்பு என்றால் நாம் நினைப்பது போல சாக்லேட்களோ, ப்ளாக் பாரெஸ்ட் கேக்குகளோ அல்லது மைதா மாவு/அஸ்கா சேர்ந்த ஜிலேபிகளோ அல்ல. இந்த பேக்கரி வகையறாக்கள் வெறும் செயற்கை இனிப்புகள் (Simple Added Sugar) என்பது சொல்லித் தெரிய வேண்டியது அல்ல. ஐம்பது வருடங்களுக்கு முன்பு வரை கூட தேவையான இனிப்பு சுவை இயற்கை முறையில் (Complex Sugar) மட்டுமே கிடைத்தது.

செள்ளை சர்க்கரை பயன்பாட்டை குறைத்துக் கொண்டு நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தவும். ஏனெனில் இதில் பல நன்மைகள் இருக்கிறது. 

– இது கலோரிகளின்றி உடலின் ஆற்றல் அதிகரிக்கும் சக்தி கொண்டது. ஆனால் தற்போது நாம் பயன்படுத்தும் சர்க்கரையில் கலோரிகள் மிகவும் அதிகம் என்பதை மறக்க வேண்டாம்.
– கருப்பட்டி உடலினுள் செல்லும் போது அசிட்டிக் அமிலமாக மாறி, வயிற்றில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை அதிகரித்து, எளிதில் செரிமானமாகச் செய்யும் இதுவே மலச்சிக்கலை தடுக்க உதவும்.
– இதய நோய்களில் இருந்து நாட்டுச் சர்க்கரை காக்கும்.
– நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டும்.
–  புற்று நோய் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்.
– இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைந்திருந்தால் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவில் இதுவும் ஒன்று.

நோய்கள் ரிவிட் அடிக்காமலிருக்க ,இந்த மாதிரி ஸ்வீட் சாப்பிடுங்க


– நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இந்த கொழுப்பு சேர்மானத்தை தடுக்க முடியும்.
– இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
– வெள்ளை சர்க்கரையில் உள்ள சில ரசாயனங்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோயை உண்டாக்ககூடும். நாட்டு சர்க்கரை பயன்பாடு இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தாது.

ஆயுர்வேதக் குறிப்புகளின்படி இனிப்புச் சுவைக்குப் பொதுவாக குளிர்ச்சி மற்றும் கபம் உண்டாக்கும் தன்மை உண்டு. தேன், மாம்பழம் போன்ற சில பதார்த்தங்களுக்கு மட்டும் சிறிது சூடு உண்டாக்கும் தன்மை உண்டு. இவை விதிவிலக்குகள். உடலின் வாதம் மற்றும் பித்தத்தைச் சமநிலைப்படுத்தும்; கபத்தை அதிகரிக்கும் தன்மை இனிப்புச் சுவைக்கு உண்டு. அதனால் இனிப்பு என்பதே தேவைப்படும் போது, சுவையறிந்து, பொருளறிந்து பயன்படுத்தும் பொருளாக உணவில் இருந்தது.

பொதுவாகவே, இனிப்பு என்றால் நாம் நினைப்பது போல சாக்லேட்களோ, ப்ளாக் பாரெஸ்ட் கேக்குகளோ அல்லது மைதா மாவு/அஸ்கா சேர்ந்த ஜிலேபிகளோ அல்ல. இந்த பேக்கரி வகையறாக்கள் வெறும் செயற்கை இனிப்புகள் (Simple Added Sugar) என்பது சொல்லித் தெரிய வேண்டியது அல்ல. ஐம்பது வருடங்களுக்கு முன்பு வரை கூட தேவையான இனிப்பு சுவை இயற்கை முறையில் (Complex Sugar) மட்டுமே கிடைத்தது.

இயற்கை இனிப்பு (Complex Sugars)

மூலப்பொருள்: சர்க்கரை சத்துடன் நார்ச்சத்து, இரும்புச்சத்து, தாது உப்புக்கள், வைட்டமின்கள் சேர்ந்தது.

தன்மை: உட்கொண்டால் இரத்தத்தில் சர்க்கரை சத்தை தேவையான அளவு மட்டும், மிக சீராக வெளியேற்றும் நல்ல குணம் (Low Glycaemic)

கிடைக்கும் உணவுகள்: பழங்கள், முழு தானியங்கள், கிழங்குகள், வெள்ளரி, தேன், தேங்காய், எள், பீன்ஸ், பச்சை பட்டாணி, நாட்டு சர்க்கரை

உடலுக்கு: நல்லது, ஆரோக்கியமானது.

எக்காலத்தும் மனித நலவாழ்விற்கு குந்தகம் விளைவிக்காதது, முதல் வகை. (சூரிய ஒளி மின்சாரம், மழை நீர் சேகரிப்பு)

சரியாக கையாளப்படாமல் போனால் குந்தகம் விளைவிக்கும், இது இரண்டாம் வகை. (அணு அறிவியல்)

மனிதகுல நாசத்திற்கு மட்டுமேயான கண்டுபிடிப்பு, இது மூன்றாம் வகை.

வெல்லப்பாகை பளபள சர்க்கரையாய் மாற்றும் தொழில்நுட்பம் இந்த மூன்றாம் வகையைச் சார்ந்தது. ஏனெனில், இந்த தொழில்நுட்பம் மூலம் கிடைக்கும் இரண்டு முக்கிய பொருட்கள் வெள்ளை சர்க்கரை மற்றும் ஆல்கஹால் (சாராயம்)! ஆம், சுத்திகரிப்பு முறையின் ஒரு முக்கிய உப உற்பத்தி (byproduct) பொருள் ஆல்கஹால்!!

இடித்த மாவினை வேக வைத்து வெல்லப் பாகினை சேர்த்துக்கட்டிய எள்ளுருண்டை, பாசிப்பயறு மா உருண்டை, அக்கார வடிசல் (சர்க்கரைப் பொங்கல்), அதிரசம், பாயாசம், மோதகம், பணியாரம், பஞ்சாமிர்தம், பொரி விளங்காய் என வகை வகையாய், இனிப்போடு உடலுக்கும் ஊட்டம் அளித்த பண்டங்களை நாம் ஒன்றும் அறியாமல் இருந்ததில்லை.