எந்நேரமும் ஹெட் போன் மாட்டும் இளைஞர்களே! எதிர்காலத்துல இந்த நோய்க்கிட்ட மாட்டுவீங்க .

 

எந்நேரமும் ஹெட் போன் மாட்டும் இளைஞர்களே! எதிர்காலத்துல இந்த நோய்க்கிட்ட மாட்டுவீங்க .

தற்போதைய காலக்கட்டத்தில் பலரும் காதுகளில் ஹெட்போன் மாட்டிக் கொண்டே திரிகிறோம்.

எந்நேரமும் ஹெட் போன் மாட்டும் இளைஞர்களே! எதிர்காலத்துல இந்த நோய்க்கிட்ட மாட்டுவீங்க .

 வேலைபளுவை குறிக்கிறோம் என்பதற்காக, 24 மணிநேரமும் ஹெட்போன் வழியாக பாடல் கேட்பது நமது பொழுதுப்போக்காக மாறிவிட்டது.இதன் காரணத்தால் இன்று காது கேட்கும் திறனும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

புகையிலை பழக்கம் அந்நபரின் காது கேட்கும் திறனை மெல்ல, மெல்ல குறைய செய்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே, புகைக்கும் பழக்கத்தை கைவிட்டுவிடவும்.

காதுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக தினமும் கண்டத்தைவிட்டு காதை நோண்ட வேண்டாம். மேற்புறமாக தினமும் குளித்து முடித்த பிறகு காதுகளை சுத்தம் செய்யுங்கள். அடிக்கடி ஏதேனும் பிரச்சனை போன்று உணர்ந்தால் மருத்துவரை அணுகுங்கள்.

ஆன்டி-பயாடிக், புற்றுநோய் மருந்துகள் என 200க்கும் மேற்பட்ட மருந்துகள் காது கேட்கும் திறனை குறைக்கும் தன்மை கொண்டவை. அதிகமாக ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வது கூட காது கேட்கும் திறனை பாதிக்கும்.

செவிகளில் அழுக்கு சேமிக்கப்பட்டு இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் குறிப்பிட்ட காலம் கடந்தும் இருந்தால், மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்வது நல்லது. . காது வலி . கேட்கும் திறன் குறைதல் அல்லது பகுதி நேர காது கேளாமை . காதில் ரீங்காரம் ஒலிப்பது . காது அடைப்பது போல் உணர்வு . காதில் சீழ் வடிதல் . மயக்கம் . காதில் இருந்து துர்நாற்றம் உண்டாவது . காதுகளில் அரிப்பு அல்லது எரிச்சல் . கடுமையான சுழல் உணர்வு . சமநிலை இழப்பு . நடக்க இயலாமை . வாந்தி . அதிக காய்ச்சல் . திடீர் காது கேளாமை

 தேங்காய் எண்ணெய் போன்றவற்றை சூடாக காய்ச்சி, அதை பயன்படுத்தி காதில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய முடியும். தேங்காய் எண்ணெயை சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய் வெதுவெதுப்பாக இருக்குமாறு காய்ச்சத் தொடங்கவும். வெதுவெதுப்பாக இருக்கும் எண்ணெயில் 3-4 துளிகளை காதில் விடவும். இந்த வெதுவெதுப்பான எண்ணெய் கரைப்பானாக செயல்பட்டு காதில் உள்ள மெழுகை கரைத்து, எளிதில் வெளியேறச் செய்யும். இவ்வாறு எண்ணெயை காதுக்குள் விடும் போது, தலையை எதிர்ப்புறமாக திருப்பி வைத்தால், எண்ணெய் காதுக்குள் ஆழமாக உள்ளே செல்லும். இரவு முழுவதும் எண்ணெயை காதுக்குள் வைத்திருக்கும் பொருட்டாக பஞ்சை கொண்டு காதை அடைத்து விடுங்கள். அடுத்த நாள் காலையில் தண்ணீரை விட்டு காதை சுத்தம் செய்யுங்கள் மற்றும் அதிகபட்சமாக இருக்கும் எண்ணெயையும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யுங்கள்.

மென்மையான பட்ஸ்களைக் கொண்டு காதுகளை தொடர்ந்து சுத்தம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த முயற்சியின் போது நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் – மென்மையான பட்ஸ்களை தேர்ந்தெடுப்பது தான். காதையோ அல்லது அதன் உட்பகுதிகளையோ சேதப்படுத்தக் கூடிய பட்ஸ்கள் அல்லது கருவிகளை பயன்படுத்த வேண்டாம். நல்ல தரமான மற்றும் மென்மையான பட்ஸ்கள் மருந்தகங்களில் கிடைக்கின்றன.

நாள் முழுக்க நாம்  ஓடிக் கொண்டே இருந்தால் நாம் சோர்வடைவதை போல, நாள் முழுக்க சத்தத்தை கேட்டுக் கொண்டே இருந்தால் காதுகளும் சோர்வடைந்துவிடும். எனவே, தினமும் ஓரிரு மணிநேரம் அமைதியான இடத்தில் அமர்ந்து செவிகளுக்கு ஓய்வளிக்க வேண்டும்.