Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் பக்க விளைவு இல்லாமல் பக்காவா அல்சரை குணமாக்க  அற்புதமான வைத்திய முறைகள்

பக்க விளைவு இல்லாமல் பக்காவா அல்சரை குணமாக்க  அற்புதமான வைத்திய முறைகள்

தினமும் மூன்று வேளை உணவு கட்டாயம். அதிலும் காலை உணவை தவிர்க்கவே கூடாது என்பதுதான் மருத்துவர்களின் அறிவுரை. பரபரப்பான உலகில் பெரும்பாலோர் செய்யும் தவறு காலை உணவை டீ அல்லது காபியோடு முடித்துவிடுவது தான். இவை மட்டுமா இன்னும் கூட அன்றாட வாழ்வில் நாம் செய்யும் தவறுகள் அல்சரை வரவழைத்துவிடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அவை என்னென்ன என்பதை தெரிந்துகொண்டு அதை தவிர்த்தால் அல்சரை வரவிடாமல் தடுக்கலாம்.

பக்க விளைவு இல்லாமல் பக்காவா அல்சரை குணமாக்க  அற்புதமான வைத்திய முறைகள்

நோயைத் தவிர்க்க இந்த உணவுகளைத் தவிர்த்து விடுங்கள். சத்துக்கு இந்த உணவை எடுத்து கொள் ளுங்கள் என்று சொல்வதுண்டு. ஆனால் இரைப்பை மற்றும் குடல் புண் உண்டாக காரணமே உணவு தான்.உணவை தேர்ந்தெடுத்தது சாப்பிடாததுதான் அல்சருக்கு முக்கிய காரணம் என்றாலும் மன அழுத்தம், மன பதட்டம், உரிய இடைவெளியில் உணவு உட்கொள்ளாதது, சுயமாக வலி நிவாரண மாத்திரைகளை அடிக்கடி எடுத்துகொள்வது, ஆரோக்கிய குறைபாடால் அதிகளவு எடுக்கும் ஸ்டீராய்டு மாத்திரைகள், அமிலம் கலந்த காரம் அதிகமான உணவை எடுத்துகொள்வது போன்றவை எல்லாம் அல்சருக்கு காரணம் என்கிறார்கள் .மருத்துவர்கள்.

பக்க விளைவு இல்லாமல் பக்காவா அல்சரை குணமாக்க  அற்புதமான வைத்திய முறைகள்

இன்றைய காலத்தில் பெரும்பாலோனர் அல்சர் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதற்காக கண்ட கண்ட மருந்துகளை எடுப்பதை விட எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாத ஒரு சில இயற்கை வைத்திய முறைகளை கையாண்டால் போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம். ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம். கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.

வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம். பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெய்யில் கலந்து உண்ணலாம்.

கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.

பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம். சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்

காரமான மசாலா நிறைந்த உணவு எப்போதும் வேண்டாம். புகைப்பழக்கமும், மதுப் பழக்கமும் கண்டிப்பாக தவிர்கக் வேண்டும். ரெட் மீட் உணவும் அதிகம் தவிர்ப்பது நல்லது.

சரியான நேரத்தில் உணவு எடுத்துகொள்ளுதல், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், பழக்கலவைகள், தயிர், தேங்காய்ப்பால் போன்றவை அல்சர் இருப்பவர்களுக்கு விரைவில் நிவாரணம் தரும். உணவு வகைகளும் எளிதில் செரிமானத்தை உண்டாக்கூடியவையாக இருப்பது குடல் புண் இருப்பவர்க ளுக்கு நன்மை தரும்.

பக்க விளைவு இல்லாமல் பக்காவா அல்சரை குணமாக்க  அற்புதமான வைத்திய முறைகள்

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

ஆல்-ரவுண்டராக அசத்திய மேக்ஸ்வெல், ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஹர்ஷல் படேல்! பெங்களூரு அணி அசத்தல் வெற்றி

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 39-வது லீக் ஆட்டமானது துபாய் சர்வதேச மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும்மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்றது.

”எடப்பாடியை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும்”

எடப்பாடி பழனிச்சாமியை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாஜக, அதிமுக தனித்து போட்டி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டணி கட்சிகளான பாஜகவும் அதிமுகவும் தனித்து போட்டியிடுகிறது. பிரச்சார வாகனத்தில் கூட்டணி கட்சியின் கொடிகள் இல்லாமலும், பொதுமக்களிடம் பரப்புரை நோட்டீஸ் கொடுக்காமலும் பாஜகவினர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்

சக அதிகாரியால் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் விமானப்படை அதிகாரி

கோவையில் இந்திய விமான படை பயிற்சி கல்லூரியில் பெண் விமானப்படை அதிகாரியை வன்கொடுமை செய்த சக அதிகாரி கைது செய்யப்பட்டார்.
TopTamilNews