இந்த குப்பைக்கு குட் பை சொன்னால்,தொப்பை உங்களுக்கு குட் பை சொல்லிடும்

 

இந்த குப்பைக்கு குட் பை சொன்னால்,தொப்பை உங்களுக்கு குட் பை சொல்லிடும்

தொப்பை என்பது பலருக்கும் பெரும் கவலையை விளைவிக்கிறது. உட்கார்ந்த இடத்திலே வேலை செய்வது, கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை உண்பது, சரிவர தூங்காதது, மது அருந்துவது போன்ற பல காரணங்களால் தொப்பை வர வாய்ப்புள்ளது.

இந்த குப்பைக்கு குட் பை சொன்னால்,தொப்பை உங்களுக்கு குட் பை சொல்லிடும்

உடற்பருமனை ஒரு தனி நபர் உடல் சார்ந்த நோயாய் மட்டும் காண இயலாது. ஏனெனில் இன்று உலக அளவில் 3ல் 2 மரணங்கள் தொற்று அற்ற நோய்களான (Non-communicable disease) சர்க்கரை நோய், இதய நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோயால் ஏற்படுகின்றன. இவையனைத்திற்கும் உடற்பருமன் ஓர் முக்கிய காரணியாய் உள்ளது.

நம் தேசத்தில் ஒரு பாதி மக்களுக்கு உணவுக்கு வழியில்லை; அதனால் பிரச்சனை. மறுபாதிக்கு உணவு இருந்தும், அதில் எதை, எப்படி, எவ்வளவு எடுக்க வேண்டும் என்கிற கேள்விகளுக்கு சரியான விடையில்லாததால்தான் பிரச்சனை.

இந்நிலைக்கு அதிமுக்கிய காரணம், சத்தமில்லாமல் நம்மை வளைத்துவிட்ட சர்வதேச உணவுச் சந்தையும், அந்த வர்த்தகத்தின் கோரப்பசியும்தான். கேழ்வரகு கஞ்சியும், பாசிப்பயறு சுண்டலும் சாப்பிட்டு திடகாத்திரமாய் வளர்ந்த நம் குழந்தைகள், இன்று ஐங்க் (குப்பை) உணவு (Junk food) எனப்படும் சிப்ஸ், பேக்கரி பொருள், கோலா பானம், நூடுல்சுக்கு அடிமையாக்கப்பட்டு, உருளைக்கிழங்கு போல் உருண்டு திரண்டு திராணியற்று வளர்கிறார்கள்.உருளைக்கிழங்கு, கடலை, பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பதை பெருமளவு குறையுங்கள். அல்லது சாப்பிடாமல் விட்டுவிடுங்கள்.

பசிக்கு மட்டுமே உண்டோம்! பண்டிகையின் போது மட்டுமே வெள்ளை அரிசி! அசைவம் அளவாய் வைத்தோம்! விரதங்கள் மேற்கொண்டோம்! ஐங்க் வகையறாக்கள் என்னவென்றே அறியாதிருந்தோம்! கூடி உழைத்தோம்! நம் பிள்ளைகள் ஓடியும், ஆடியும், பாடியும் விளையாடினர்!”

இவை அனைத்தையும் நாம் வேகமாய் இழப்பதால்தான் தொற்று அற்ற நோய்களின் பாரம் தாங்க முடியாததாகிறது. இந்தியாவில், 6ல் 1 ஆணும், 5ல் 1 பெண்ணும் குண்டாய் உள்ளனர். வளரும் குழந்தைகளில் 17% பேர் அதிக எடை கொண்டவர்கள்.

ஆக உடற்பருமனை வெறும் நோயாய் பாராமல், நம் கலாச்சார சிதைவின் ஒரு வெளிப்பாடாய் பார்த்து, நம் மண்ணின் வாழ்வியல் முறைகளைக் காத்து கடைபிடித்தலே நிரந்தர தீர்வுக்கு வழி வகுக்கும்.

வருமுன் காப்பதே நலம். அடிவயிற்றில் சிறிது கொழுப்பு சேர்ந்தாலே உஷாராய் நமது உடலை காத்துக் கொள்வதே சிறந்தது.

ஆங்கில மருத்துவத்தில் பல நவீன முறைகள் இருந்தாலும், உடற்பருமனுக்கான சிகிச்சையில் வெற்றி இல்லையென்பது மருத்துவர்களே ஒப்புக் கொள்வது.

சித்த, ஆயுர்வேத முறைகளில் பசியைக் குறைத்தும், தேவையற்ற நீரை வெளியேற்றியும் அளிக்கப்படும் சிகிச்சையில் ஓரளவு வெற்றி கிடைக்கிறது.

ஆயுர்வேதத்தில், “உத்வர்தனா” எனும் மூலிகைப் பொடியால் ஆன பாரம்பரிய மசாஜ் சிகிச்சை பிரபல்யம்.

எதுவாக இருந்தாலும், வாழ்வியல் மற்றும் உணவுமுறை மாற்றங்களே சிகிச்சையில் முதலிடம் பிடிக்கின்றன. தினசரி குறைந்தது அரை மணிநேர நடைப்பயிற்சி, மித ஓட்டம், யோகாசனப் பயிற்சிகள் செய்வது பலனளிக்கும். (பொதுவாக தொப்பையின் கொழுப்பை எரிக்கும் என நம்பப்படும் உடற்பயிற்சிகள் வயிற்றுத்தசையை வலுவாக்குமே தவிர தொப்பைக் கொழுப்பை எரிப்பதில்லை). பகலுறக்கம் தவிர்க்க வேண்டும். மற்றும் இரவு உணவுக்கும் தூக்கத்திற்கும் ஒரு மணி நேர இடைவெளியாவது இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

பாலிஷ் செய்யப்பட்ட அரிசிக்கு பதில் கைக்குத்தல் அரிசி, சிகப்பரிசி, ராகி, தினை, கம்பு முதலிய நார்ச்சத்து மிகுந்த சிறுதானியங்களை வாரம் 4 நாட்களாவது சேர்ப்பது.

அதிக அளவில் பழங்கள், காய்கறிகள், கீரைகள் சேர்த்தல்

இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பதற்கேற்ப கொள்ளு ரசம், சுண்டல் எடுப்பதும் நலம் பயக்கும்.

தேன், பூண்டு, வெந்தயம், இலவங்கம் சேர்ப்பதும் நலம்.

சக்கரைக்கு பதிலாக சுத்தமான தேனை உபயோகிப்பதன் மூலம் தொப்பை குறையும். – ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு எலுமிச்சையை பிழிந்து கலந்து கொண்டு பின் அதோடு மூன்று பல் பூண்டை சேர்த்து பதினைந்து நிமிடங்கள் ஊறவிடவும். பின் பூண்டு பற்களை அகற்றி விட்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் விரைவில் தொப்பை குறையும்.

50 கிராம் கொள்ளை 750 மில்லி தண்ணீரில் முந்தய நாள் இரவே ஊற வைத்து, அதிகாலையில் எழுந்து அதை வேகவைத்து வடிகட்டி கொள்ளு நீரை குடித்து வர தொப்பை விரைவில் குறையும். இது சிலருக்கு உஷ்ணத்தையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.