உப்பு அதிகமானால் தப்பு அதிகமாகுமாம் -அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவு

 

உப்பு அதிகமானால் தப்பு அதிகமாகுமாம் -அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவு

உப்பு அதிகமானால் தப்பு அதிகமாகுமாம் -அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவு

நம் உடலுக்கு தேவையான சோடியம் நாம் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றிலிருந்து கிடைத்துவிடும்.அதனால் தனியாக உணவில் உப்பை அதிகம் சேர்க்காமலிருந்தால் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம்


பொதுவாக உணவுகளை பதப்படுத்த அவற்றில் உப்பு அதிகம் சேர்க்கப்படுகிறது. எனவே பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடவே கூடாது. ஏனென்றால் இவை வயிற்று புற்றுநோயை உண்டாக்க கூடியது. அதேபோன்று உப்பு அதிகம் சேர்க்கப்படும் சூப், ஊறுகாய், கருவாடு, அப்பளம் மற்றும் குளிர்பானங்கள் இவற்றை தவிர்ப்பதும் நல்லது.

நம் உடலுக்கு தேவையான சோடியம், சாப்பிடும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றிலிருந்து கிடைத்துவிடும். முக்கியமாக நாம் சாப்பிடும் உணவில் உப்பை அதிகம் சேர்த்தால் அது சிறு நீரகத்தைப் பாதிக்கும். ஏற்கனவே சிறுநீர் பாதிப்பு உள்ளவர்களுக்கும் இன்னும் குறைவாகவே தேவைப்படும். உப்பு அதிகரிக்கும் பொழுது அதில் உள்ள அதிக சோடியம் உடலில் உள்ள இரத்த ஓட்டத்திற்கு கொண்டுவந்துவிடும்.

இதனால் ரத்தத்தில் தண்ணீரின் அளவு அதிகமாகி அதில் அழுத்தம் அதிகரித்துவிடும். இதன் விளைவாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும். உண்மையில் உணவில் உப்பின் அளவை குறைத்து சாப்பிட்டால் புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு, வயிறு சார்ந்த கோளாறுகளை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். ரத்த அழுத்தம், பக்கவாதம், இதய நோய்கள், நீரிழிவு நோய் போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கலாம்.

அதேபோன்று 50 வயதிற்கு மேற்பட்டோர் குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சர்க்கரை நோய், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் உணவில் உப்பை குறைத்துக் கொள்வது நல்லது. எனவே உப்பை குறைத்து சாப்பிட்டால் கோபம் குறைந்து ,டென்ஷன் குறைந்து வேலையில் எந்த தப்பும் நடக்காமல் பார்த்து கொள்ளலாம் என் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் .