ஏண்டா கல்யாணம் பண்ணோம்னு காண்டாகுறவங்க ,கட்டாயம் இதை படிங்க.

 

ஏண்டா கல்யாணம் பண்ணோம்னு காண்டாகுறவங்க ,கட்டாயம் இதை படிங்க.

இதைப் படித்து தெரிந்து கொண்டு, இவற்றை மனதில் இருந்து நீக்கி, சந்தோஷமான மண வாழ்க்கையை வாழுங்கள்.

ஏண்டா கல்யாணம் பண்ணோம்னு காண்டாகுறவங்க ,கட்டாயம் இதை படிங்க.

அகங்காரம்

எப்போதுமே தம்பதியருக்குள் தான் என்ற அகங்காரம் இருக்கக் கூடாது. இது தான் மண வாழ்விற்கு முதல் எதிரி. முதலில் அனைவருமே “திருமணம் என்பது ஆர்வமுள்ள ஒரு விளையாட்டு. இத்தகைய விளையாட்டில் இருவருமே நன்கு விளையாடி, இருவருமே வெற்றி பெற வேண்டும்” என்று நினைக்க வேண்டும்.

சந்தேகம்

சந்தேகம் என்பது ஒரு நோய். அந்த நோய் ஒருமுறை வந்தால், அதனை குணப்படுத்த முடியாது. எனவே சந்தேகம் என்ற நோயை மனதில் வராமல் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு முதலில் துணை மீது நம்பிக்கை வேண்டும்.

பேச்சு இடைவெளி

தம்பதிகள் இருவரும் எப்போதும் மனம் விட்டு பேச வேண்டும். அதைவிட்டு எப்போதும் வீட்டில் அமைதியுடன், அவரவர் வேலையை செய்து கொண்டிருந்தால், அதுவே இருவரின் மண வாழ்விற்கு முற்றுபுள்ளி வைத்துவிடும்.

நேரம்

இன்றைய காலத்தில் தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதால், இருவராலும் சரியாக பார்த்து பேச நேரம் கிடைக்காமல் போகிறது. இவ்வாறு இருவரும் சந்திக்க முடியாத அளவு நேரம் கிடைக்காமல் போனால், பின் சந்தோஷமான மண வாழ்விற்கே ஆபத்து ஏற்படும். எனவே எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும், துணையுடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும்.

விமர்சனம்

இருவருக்கும் இடையில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால், அதை அப்பொழுதே பேசி சரிசெய்து கொள்ள வேண்டும். அதைவிட்டு, அதனைப் பற்றி அடிக்கடி பேசிக்கொண்டிருந்தால், அதுவே துணைக்கு வெறுப்பை ஏற்படுத்தி, பிரிவை உண்டாக்கும்.

கெட்ட நடத்தை

துணை ஏதேனும் தவறு செய்து விட்டால், அப்போது அதனால் ஏற்படும் கோபத்தை அவரிடம் காண்பிக்கும் போது, அவர் மனமானது புண்படும்படியாக இல்லாதவாறு நடக்க வேண்டும். அதைவிட்டு, அவர் மனம் புண்படும் படியாகவோ அல்லது அசிங்கப்படுத்தும் படியாகவோ நடந்தால், பின் அது கெட்ட விளைவை உண்டாக்கும். மேலும் கோபத்தினால் பேசும் பேச்சை பார்த்து பேச வேண்டும். அதைவிட்டு வார்த்தையை ஒரு முறை விட்டுவிட்டால், பின் அதனால் ஏற்பட்ட காயத்தை அகற்ற முடியாது. ஆகவே இத்தகைய குணத்தை அறவே தவிர்க்க வேண்டும்

குடும்ப பிரச்சனை

இருவருக்குள் ஏதேனும் பிரச்சனை என்றால் அந்த பிரச்சனையில் மூன்றாம் நபரை குறுக்கிட வைக்க வேண்டாம். ஏனெனில் அவ்வாறு குறுக்கிட வைத்தால், சிறு பிரச்சனை கூட பெரிதாகிவிடும். பின் அதுவே விவாகரத்து வரை முடியும். ஆகவே எதுவாக இருந்தாலும், தம்பதியர்களே பேசி முடிக்க வேண்டும்.