உருமாறிய கொரானாவால் எந்தெந்த உறுப்புகள் உருக்குலையும்னு தெரிஞ்சிக்கோங்க .

 

உருமாறிய கொரானாவால் எந்தெந்த  உறுப்புகள் உருக்குலையும்னு  தெரிஞ்சிக்கோங்க .

கொரோனா தொற்றுக்கு நீண்ட நாட்கள் சிகிச்சை எடுத்து குணமடைந்தவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால், தொடர் மருத்துவ பரிசோதனைகள் செய்வது அவசியம்என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

உருமாறிய கொரானாவால் எந்தெந்த  உறுப்புகள் உருக்குலையும்னு  தெரிஞ்சிக்கோங்க .

அனைத்து வைரஸ்களும் காலப்போக்கில் உருமாற்றமடையும். அதில் கோவிட்-19 வைரஸ் மட்டும் வேறுபட்டதல்ல. இப்படி வைரஸ்கள் உருமாறும் போது, அதன் பண்புகளில் சிறு மாற்றங்களை ஏற்படுத்தினாலும், வேறு சில மாற்றங்கள் வைரஸை மேலும் பரவக்கூடியதாக மற்றும் ஆபத்தானதாக மாற்றக்கூடும்.

கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு, சில நாட்களுக்கு பின் வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக, ‘கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகி, நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருந்தவர்கள், குணமடைந்த பின் மிக கவனமாக இருக்க வேண்டும்என, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

கொரோனாவுக்கு நீண்ட நாட்கள் சிகிச்சை எடுத்து குணமடைந்தவர்களுக்கு, ஆறு மாத காலத்திற்குள் சிறுநீரக கோளாறு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சிறுநீரக கோளாறுகளில் அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை. ஆறு மாதங்களுக்கு பின், பரிசோதனை மேற்கொள்ளும் போது, ‘டயாலிசிஸ்செய்ய வேண்டிய அளவுக்கான தீவிர பாதிப்பு நிலைக்கு சிலர் சென்றுவிடுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே, நீண்ட நாள் சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள், தொடர் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம். கோவிட்-19 இன் பல்வேறு விகாரங்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு எவ்வளவு விரைவாக பயணிக்கின்றன என்பதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். முன்னதாக இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய டெல்டா மாறுபாடு, தற்போது இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் பரவி சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகில் எந்த பகுதியிலும் நிகழும் கோவிட்-19 இன் பிறழ்வு மற்ற பகுதிகளுக்கும் பயணிக்கக்கூடும்