இதை படிச்சா, உங்கள யாராவது அடிச்சா கூட சிரிச்சுகிட்டே இருப்பிங்க.

 

இதை படிச்சா, உங்கள யாராவது அடிச்சா கூட சிரிச்சுகிட்டே இருப்பிங்க.


கோபம் ஒரு கொடிய மிருகம்; அது வளர்ப்பவர்களையே அழிக்கும். கோபமும் புயல் போன்றது தான் அது அடங்கிய பின் தான் தெரியும், அதனால் அடைந்த நஷ்டம் எவ்வளவு என்று.மந்தரை என்னும் கூனிக்கு ராமன் மீது ஏற்பட்ட கோபம் கைகேயி மூலமாக ராமன், லட்சுமணன், சீதை மூவரையும் வனவாசம் அனுப்பியது.

இதை படிச்சா, உங்கள யாராவது அடிச்சா கூட சிரிச்சுகிட்டே இருப்பிங்க.

கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா, வேண்டாமா என்பதை முடிவெடுங்கள்.

மன அழுத்தம்

கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

இதய நோய்

கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.

தூக்கமின்மை

எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை பைத்தியமாக கூட மாற்றிவிடும்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ, அந்த நேரமே உடலில் இரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது பெரும் அளவில் பாதிக்கப்படும்.

சுவாசக் கோளாறு

சுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே ஆஸ்துமா உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

தலைவலி

எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின் போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது.

மாரடைப்பு

பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும். இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மூளை வாதம்

மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது.

கோபம் வரும் போது உடனடியாக அதைத் தடுக்க நம் மூச்சு உள்ளே போவதை, வெளியே வருவதை கவனிக்க வேண்டும். இதற்கு பெயர் விபாசனா எனப்படும்.பற்களை இறுக்கிக் கொண்டு உதடுகளைப் பிரிக்காமல் மவுனம் காக்கலாம். இரண்டு கைகளில் உள்ள நடு விரல்களை அழுத்தலாம். நடை, உடற் பயிற்சி செய்யலாம். உடனடியாக குளிர்ந்த நீர்அருந்தலாம். வாழ்க்கைக்கு முக்கியமானவர்களாக நாம் கருதும் நபர்களின் முகங்களை ஒரு வினாடி நம் மனக்கண்ணில் கொண்டு வந்தால் கோபம் போய்விடும் என உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர் .மன்னிக்கும் குணத்தை வளர்த்துக் கொள்ளுதல், பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி செய்தல், தியானம் செய்தல், நகைச்சுவை உணர்வு, வாரம் ஒரு நாள் விரதம், சைவ உணவுகளை உண்டு அசைவ உணவுகளை தவிர்ப்பது போன்ற வழிமுறைகளை கையாண்டால் கோபத்தை குறைக்கலாம். பிறர் நம் மீது கோபப்படும் போது அந்த கோபத்தை பொருட்படுத்தாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடலாம்.