• July
    22
    Monday

Main Area

Main



குடும்ப பெண்களுக்கான அவசியமான குறிப்புகள்

குடும்ப பெண்
குடும்ப பெண்
Loading...

மகிழ்ச்சிகரமான வீடு என்பது, அந்த வீட்டில் இருக்கும் பெண்களின் மனநிலையைப் பொறுத்தே அமைகிறது. பெண் என்பவள் எப்படி சிந்திக்கிறாளோ நிச்சயமாக அதைப் போன்றே அந்த குடும்பம் அமைகிறது. இந்து மதம் பெண்களுக்கான சில சம்பிரதாயங்களை வகுத்து வைத்திருக்கிறது. முற்போக்குத்தனம் என்று இவற்றை முழுமையாக தள்ளி ஒதுக்காமல் கடைபிடித்து வந்தால் நிச்சயம் பலன்கள் கிட்டும். காரணம், நமது பெரியவர்கள் வகுத்து வைத்த ஒவ்வொரு செயலுக்கும் பின்னால், அறிவியல் காரணங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது.

women

நம் மனத்தினை அமைதியாக வைத்துக் கொள்ளவும், கடவுளை வழிபடுவதையும் கடமையாக கொள்ளும் போது நம் வாழ்வு வளப்படும். ஒவ்வொரு பெண்ணும் அவசியம் அறிந்து வைத்து கொள்ளக்கூடிய தகவல்களை நாமும் அறியலாம். 
திருமாங்கல்யத்தை மஞ்சள் கயிற்றில் மட்டுமே அணிய வேண்டும்.
சுமங்கலி பெண்கள் ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். இரண்டு அல்லது மூன்று விரல்களில் அணிவது கணவருக்கு உடல் நிலை பாதிக்கும். 
கோலம் போடும் போது கிழக்கு அல்லது வடக்கே பார்த்து நின்ற படி போட வேண்டும். தெற்கு பார்த்து  மட்டும் கோலம் இடக்கூடாது.
குங்குமத்தை  கிழக்கு பக்கம் திரும்பியவாறு தான் வகிட்டிலும் புருவத்தின் மத்தியிலும்  இட வேண்டும்.

women

வீட்டில் சுபநிகழ்வுகளின் போதும், விருந்தினர் வருகையின் போதும், பண்டிகை நாட்களிலும் கசப்பு காய்கள் உதாரணமாக பாகற்காயை சமைக்க கூடாது.
அசுப நிகழ்வுகள், அமாவாசை, தர்ப்பணம் செய்யும் நாட்களில் வாசலில் கோலம் போடுவதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் உக்கிரமான கோவில்களுக்கு செல்லக் கூடாது.
கோவிலில் கடவுளை வழிபட்ட பின்பு பின்னங்கால்களை ஒன்று சேர்த்து முன் நெற்றி தரையில் படும் படி விழுந்து வணங்குதல் வேண்டும்.
சேலை கட்டும் பெண்கள் புடவை முந்தானையை தொங்க விடக்கூடாது.
துளசியை அது கோவில் பிரசாதமாக இருப்பினும் தலையில் சூடிக்க்கொள்ள கூடாது.
மாதவிலக்கு நாட்களில் எக்காரணம் கொண்டும் சுமங்கலிப் பெண்கள் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.
இதை பின்பற்றுவதால் நம் இல்லம் செழிப்பதாக ஐதீகம்.

2018 TopTamilNews. All rights reserved.