திண்டிவனம் தொகுதி திமுக எம்எல்ஏ சீதாபதிக்கு கொரோனா தொற்று உறுதி !

 

திண்டிவனம் தொகுதி திமுக எம்எல்ஏ சீதாபதிக்கு கொரோனா தொற்று உறுதி !

திண்டிவனம் தொகுதி திமுக எம்எல்ஏ சீதாபதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திண்டிவனம் தொகுதி திமுக எம்எல்ஏ சீதாபதிக்கு கொரோனா தொற்று உறுதி !

தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுத் தேறி வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதி திமுக எம்எல்ஏ சீதாபதி, அவரது கணவர் சொக்கலிங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான நிலையில் அவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டிவனம் தொகுதி திமுக எம்எல்ஏ சீதாபதிக்கு கொரோனா தொற்று உறுதி !
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினந்தோறும் 5 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்று தமிழக சுகாதாரத்துறையின் அறிக்கை கூறி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5,344 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,47,337 ஆக அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.