பிட்னஸ் பேண்ட் – டைமெக்ஸ் அறிமுகம்

 

பிட்னஸ் பேண்ட் – டைமெக்ஸ் அறிமுகம்

பண்டிகை கால விற்பனையை பூர்த்தி செய்யும் விதமாக டைமெக்ஸ் நிறுவனம்,பிட்னஸ் பேண்ட்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

பிட்னஸ் பேண்ட் – டைமெக்ஸ் அறிமுகம்

இந்த பேண்ட்கள் 2.4 செண்டி மீட்டர் தொடுதிரை வசதியுடன் வருகிறது. ஐந்து நாட்களுக்கு இதன் பேக் அப் இருக்கும் வகையிலான பேட்டரியை கொண்டுள்ள இந்த பிட்னஸ் பேண்ட், அலாய் கேஸ் கொண்டுள்ளது. இதை அணிந்துகொள்பவரின் உடல் செயல்பாடுகள், இதய துடிப்பு ஆகியவற்றை கண்காணிப்பதுடன், இதில் மியூசிக் கண்ட்ரோல் மற்றும் நோட்டிபிகேஷன் அலர்ட் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன.

பிட்னஸ் பேண்ட் – டைமெக்ஸ் அறிமுகம்

பேஷன் அணிகலனாகவும், உடல்நிலையை கண்காணிக்கும் முக்கிய அணிகலனாகவும் இதை அணியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப பேஷனான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மாடலிலும் சாதாரண கருப்பு சிலிகான் ரப்பர் என இதன் ஸ்டிராப்பில் மாறுபாடு காட்டியிருக்கும் டைமெக்ஸ் நிறுவனம், இவற்றை ரோஸ் கோல்ட் மற்றும் கருப்பு ஆகிய 2 வண்ணங்களில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த பிட்னஸ் பேண்ட்கள், டைமெக்ஸ் நிறுவனத்தின் ஆன்லைன் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும். மேலும் டைமெக்ஸ் நிறுவனத்தின் சில்லரை விற்பனை கடைகளிலும் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிகிறது. இதன் விலை 4,495 ரூபாய் ஆகும்.

  • எஸ். முத்துக்குமார்