‘வெளியூர்களுக்கு’ சென்னையிலிருந்து செல்லும் கடைசி பேருந்துகள்… முழு விவரம் உள்ளே!

 

‘வெளியூர்களுக்கு’ சென்னையிலிருந்து செல்லும் கடைசி பேருந்துகள்… முழு விவரம் உள்ளே!

தமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது . இரவு 10 மணிக்கு தொடங்கும் ஊரடங்கு அதிகாலை 4 மணி வரை நீடிக்கிறது. வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நேரங்களில் தனியார் /பொது போக்குவரத்து ,வாடகை ஆட்டோ ,டாக்சி உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் இயங்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது ,இதனால் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும் ,பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகள் பகல் நேரத்தில் இயக்கப்பட்டு வருகிறது ,இந்த பேருந்துகள் இரவு 9 மணிக்குள் அந்தந்த மாவட்டங்களை சென்றடைய வேண்டும் எனவும் கணக்கிட்டு பகல் நேரத்தில் இயக்கப்பட்டு வருகிறது, அந்த வகையில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் கடைசி பேருந்துகளில் பயண விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

‘வெளியூர்களுக்கு’ சென்னையிலிருந்து செல்லும் கடைசி பேருந்துகள்… முழு விவரம் உள்ளே!

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு காலையில் 7 மணிக்கும், சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு காலை 6 மணிக்கும் பேருந்துகள் புறப்படுகின்றன. திண்டுக்கல்லுக்கு காலை 10 மணிக்கும். காரைக்குடிக்கு காலை 11 மணிக்கும், தஞ்சாவூருக்கு மதியம் 1 மணிக்கு கடைசிப் பேருந்து செல்கிறது.

‘வெளியூர்களுக்கு’ சென்னையிலிருந்து செல்லும் கடைசி பேருந்துகள்… முழு விவரம் உள்ளே!

கும்பகோணம் 7:30 மணிக்கும் ,நெல்லை, திருச்செந்தூர் ,தூத்துக்குடி, செங்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு காலை 8 மணிக்கும் கடைசி பேருந்துகள் செல்கின்றன.அதேபோல் சேலத்திற்கு மதியம் 1.30 மணிக்கும், கோவைக்கு காலை 10:30 மணிக்கும், மதுரைக்கு மதியம் 12:15 மணிக்கும், வேளாங்கண்ணிக்கு மதியம் 1.35 மணிக்கும், சேலம் மற்றும் பெங்களூருக்கு 1:30 மணிக்கும் கடைசி பேருந்துகள் செல்கின்றன.

‘வெளியூர்களுக்கு’ சென்னையிலிருந்து செல்லும் கடைசி பேருந்துகள்… முழு விவரம் உள்ளே!

அதேபோல் திருச்சிக்கு 2:45 மணிக்கும், ஓசூர் ,தர்மபுரிக்கு மதியம் 2 மணிக்கும், சிதம்பரம் ,கள்ளக்குறிச்சி விருத்தாசலம், நெய்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு மாலை 4 மணிக்கும், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், புதுச்சேரி, திருவண்ணாமலை ,போளூர், ஆரணி, ஆகிய மாவட்டங்களுக்கு மாலை 5 மணிக்கும், காஞ்சிபுரம் செய்யாறு ,ஆற்காடு, திருத்தணி, திருப்பதி ஆகிய இடங்களுக்கு இரவு 6 மணிக்கும் பேருந்துகள் செல்கின்றன.