டைம் கேப்ஸ்யூல் எல்லாம் பொய்யான செய்தி – ராமஜென்ம பூமி அறக்கட்டளை பொதுச் செயலாளர் விளக்கம்!

 

டைம் கேப்ஸ்யூல் எல்லாம் பொய்யான செய்தி – ராமஜென்ம பூமி அறக்கட்டளை பொதுச் செயலாளர் விளக்கம்!

ராமர் கோவில் தொடர்பான டைம் கேப்ஸ்யூல் எனப்படும் காலப் பெட்டகம் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு 2000 அடி ஆழத்தில் வைக்கப்படும் என்ற செய்தியை அறக்கட்டளை பொதுச் செயலாளர் மறுத்துள்ளார்.

டைம் கேப்ஸ்யூல் எல்லாம் பொய்யான செய்தி – ராமஜென்ம பூமி அறக்கட்டளை பொதுச் செயலாளர் விளக்கம்!
ராமர் கோவில் வரலாறு, புகைப்படங்கள் உள்ளிட்டவை தாமிர பட்டையத்தில் பொறிக்கப்பட்டு 2000 அடி ஆழத்தில் வைக்கப்படும். எதிர்காலத்தில் யாராவது அதை கண்டறிந்தால் ராமர் வரலாறு தொடர்பான தகவலை தெரிந்துகொள்வார்கள் என்று ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினர் காமேஸ்வர் சவுபால் தெரிவித்திருந்தார். 2000ம் அடி ஆழத்துக்கு எப்படி துளையிடப்படும், அப்படியே எதிர்காலத்தில் ஆய்வு செய்பவர்கள் 2000ம் அடி வரை எப்படி தோண்டி எடுத்து தெரிந்துகொள்வார்கள் என்று பல கேள்விகள் எழுந்தன.

டைம் கேப்ஸ்யூல் எல்லாம் பொய்யான செய்தி – ராமஜென்ம பூமி அறக்கட்டளை பொதுச் செயலாளர் விளக்கம்!இந்த நிலையில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் இன்று இது பற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இது போன்று எந்த ஒரு திட்டமும் அறக்கட்டளைக்கு இல்லை. இது தவறான தகவல். மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றார்.